தள்ளிப் போகும் ரிலீஸ் தேதி.. சூர்யா ரசிகர்களின் கோபத்துக்கு அவர் தான் காரணமாம்.. சூர்யாவின் முடிவு?
சென்னை: சூர்யாவின் சூரரைப் போற்று படத்தை ஏப்ரல் 9ம் தேதியே ரிலீஸ் செய்ய வேண்டும் என சூர்யா ரசிகர்கள் #WeWantSooraraiPottruOnApril9 என்ற ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர்.
Recommended Video
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா தயாரித்து நடித்துள்ள படம் சூரரைப் போற்று. இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார்.
சூரரைப் போற்று திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளிப் போட 2டி என்டர்டெயின்மென்ட் முடிவெடுத்துள்ளதாக வந்த தகவலை அடுத்து சூர்யா ரசிகர்கள் ட்விட்டரில் தங்களின் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
செப்டம்பர் மாதமே
சூரரைப் போற்று படத்தின் ஷூட்டிங் செப்டம்பர் மாதமே முடிந்த நிலையில், இன்னும் ஏன் ரிலீஸ் தேதியை அறிவிக்காமல் காலம் கடத்துகிறீர்கள் என சூர்யா ரசிகர்கள் சமூக வலைதளத்தில் கொந்தளித்து வருகின்றனர். மேலும், ஏப்ரல் 9ம் தேதியே சூரரைப் போற்று படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.
பாய் விரிச்சாச்சு
மாஸ்டர் படத்தின் அப்டேட் அடுத்தடுத்து வந்து கொண்டிருக்கும் நிலையில், சூரரைப் போற்று படத்தின் ரிலீஸ் தேதி அப்டேட்டுக்காக சூர்யா ரசிகர்கள், தற்போது ட்விட்டரில் முற்றுகை இட்டுள்ளனர். எங்களுக்கு இன்னைக்கு சூரரைப் போற்று அப்டேட் வந்தே ஆகணும்னு பாய் விரிச்சு போட்டு, படுத்திருப்பது போல மீம்களை போட்டு தாக்கி வருகின்றனர்.
சண்டை போடணும்
சூர்யாவின் சூரரைப் போற்று படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி உள்ள நிலையில், சூரரைப் போற்று படத்தின் மீது, சூர்யா ரசிகர்களுக்கு அளவு கடந்த நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. இதனால், மாஸ்டர் படத்திற்கு போட்டியாக சூரரைப் போற்று படத்தை ஏப்ரல் 9ம் தேதி ரிலீஸ் பண்ண வேண்டும் என்ற கோரிக்கையை ரசிகர்கள் பகிரங்கமாக முன் வைத்து வருகின்றனர்.
இவங்களுக்கு ஒண்ணும் தெரியாது
சூர்யா ரசிகர்களின் ஒட்டுமொத்த கோபமும் தற்போது 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பு நிறுவனத்தை நிர்வகிக்கும் ராஜசேகரன் பாண்டியன் மீது தான் இருக்கிறது. மாஸ்டர் படத்திற்கு போட்டியாக படத்தை ரிலீஸ் செய்ய வேண்டாம் என சூரரைப் போற்று தயாரிப்பு தரப்பு தீர்மானித்துள்ளதே, இப்படியொரு டிரெண்டிங்கிற்கும் காரணமாம்.
உங்க புத்தியை
இவ்ளோ கேக்குறோமே, எதுக்காவது ராஜசேகரன் பாண்டியன் ரியாக் பண்றாரான்னு பாருங்க.. என டைரக்ட்டாகவே சூர்யா ரசிகர்கள், தங்களது கோபத்தை வெளிக்காட்டி வருகின்றனர். மேலும், கார்த்தியின் கைதி மீமை போட்டு கடைசியில உங்க புத்தியை காமிச்சிட்டிங்கள்ல என்றும் திட்டித் தீர்த்து வருகின்றனர்.
சொல்ற தேதியில
இந்த ஒரு வாட்டி நாங்க கேக்குற தேதியில படத்தை ரிலீஸ் பண்ணுங்க.. இந்த ஒரே ஒரு வாட்டி என சூர்யா ரசிகர்கள் கெஞ்சி வருகின்றனர். நிச்சயம் விஜய்யின் மாஸ்டர் படத்துடன் போட்டி போட்டால் சூர்யாவின் சூரரைப் போற்று தான் வெல்லும் என்றும், தாங்கள் அதனை சாதிப்போம் என்றும் ரசிகர்கள் அடம்பிடித்து வருகின்றனர்.
நல்ல தேதி
இந்த திடீர் டிரெண்டிங்கால், சூர்யா ரசிகர்களுக்கும், விஜய் ரசிகர்களுக்கும் இடையே ட்விட்டர் சண்டை தொடங்கியுள்ளது. சில சூர்யா ரசிகர்கள், மாஸ்டர் படத்துடன் மோதுவதற்காக, அந்த தேதியில் ரிலீஸ் செய்ய சொல்லவில்லை. அந்த தேதியில் ரிலீஸ் செய்தால், தொடர் விடுமுறை, தமிழ் புத்தாண்டு, வசூல் அதிகமாகும் அதனால் தான் கேட்கிறோம் என்கின்றனர்.
எதுக்கு சீன்
மொக்கை தேதியில ரிலீஸ் பண்றதுக்கு.. எதுக்கு இவ்ளோ சீன் போடுறீங்க.. கேவலமான தேதி பார்த்து ரிலீஸ் பண்ண வேண்டியது தானே.. RSP அதைத் தானே பண்ன போறாரு என ரசிகர்களின் கோபம் எல்லை மீறிக் கொண்டே போகிறது. சிலர், நீங்க சூர்யா அண்ணன் கூட இருக்காதீங்க, வெளிய போயிடுங்க என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
மற்ற படங்கள்
படம் சென்சார் ஆவதற்கு முன்பாகவே ஜெயம் ரவியின் பூமி, தனுஷின் ஜகமே தந்திரம் உள்ளிட்ட படங்கள் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளன. மேலும், விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் ஏப்ரல் 9 ரிலீஸ் ஆகும் என்பதும் உறுதியாகி உள்ளது. இந்நிலையில், சூர்யாவின் சூரரைப் போற்று ரிலீஸ் தேதியை மட்டும் ஏன் அறிவிக்க தயங்குகின்றனர் என ரசிகர்கள் சீறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











