ரஜினிகாந்த் முதல் ராஜமெளலி வரை.. கங்குவா படத்தை வேறலெவலுக்கு கொண்டு சென்ற சூர்யா.. வசூல் வேட்டைதான்!

சென்னை: ரஜினிகாந்த் முதல் ராஜமெளலி வரை பல முன்னணி பிரபலங்களை வைத்து சரியாக கங்குவா படத்தின் புரமோஷனை நடிகர் சூர்யா செய்து வருகிறார். பாகுபலி படம் அளவுக்கு கங்குவா திரைப்படம் வசூல் வேட்டை நடத்த வேண்டும் என்பதில் குறியாக உள்ள சூர்யா தனது பட புரமோஷனுக்கு சிறப்பு விருந்தினராக ராஜமௌலியை அழைத்திருந்தார்.

ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் 300 கோடி ரூபாய்க்கு மேல் அதிகமான பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக கங்குவா திரைப்படம் உருவாகியுள்ளது. அடுத்த வாரம் நவம்பர் 14-ஆம் தேதி உலகம் முழுவதும் கங்குவா வெளியாகிறது.

kanguva ss rajamouli rajinikanth


இந்தப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக திஷா பதானி நடித்துள்ளார். அனிமல் படத்தில் மிரட்டிய பாபி தியோல் வில்லனாக நடித்துள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பில் மன்னிப்பு பாடல் நேற்று வெளியானது. ஒவ்வொரு பாடல்களும் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்துள்ளது.

ரஜினிகாந்த் முதல் ராஜமெளலி வரை: சென்னையில் நடைபெற்ற கங்குவா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் வீடியோ மூலமாக தோன்றி சூர்யாவையும் கங்குவா படத்தையும் பாராட்டி இருந்தார். இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற புரொமோஷன் நிகழ்ச்சியில் இயக்குநர் ராஜமௌலி பங்கேற்று இருந்தார்.

பாகுபலி படம் உருவாகவே: பாகுபலி படத்தை தான் தவறவிட்டது மிகப்பெரிய இழப்பு என நடிகர் சூர்யா பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். ஆனால், அது உண்மையிலேயே எனக்கு தான் பேரிழப்பு. சூர்யாவின் நடிப்பு எனக்கு அவ்வளவு பிடிக்கும். பாகுபலி படம் உருவாகவே சூர்யாதான் இன்ஸ்பிரேஷன் என ராஜமௌலி பேசியதும் மேடைக்கு சென்று அவரை கட்டி அணைத்த சூர்யா, ராஜமெளலியை பாராட்டி பேசினார். கஜினி படத்தின் புரமோஷனுக்காக சூர்யா ஆந்திரா வந்திருந்தபோது அந்த படத்தை எந்தளவுக்கு கொண்டு சென்றார் என்பதைப் பார்த்து தான் ஒரு படத்தை எந்த அளவுக்கு மற்ற மாநிலங்களில் கொண்டு செல்ல முடியும் என்பதை புரிந்து கொண்டேன் என ராஜமௌலி கூறினார்.

வால்பேப்பரே நீங்கதான்: இந்திய சினிமாவை நீங்க எந்தளவுக்கு உயரத்துக்கு கொண்டு சென்றுள்ளீர்கள் என நான் சொல்லித் தெரியத்தேவையில்லை. நாங்க எல்லாரும் எங்கள் குடும்ப உறுப்பினர்களின் புகைப்படத்தை மொபைல் வால்பேப்பர் ஆக வைத்திருப்போம். அனால் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா உங்கள் புகைப்படத்தை தான் மொபைல் வால்பேப்பராக வைத்திருக்கிறார் என சூர்யா பேசினார்.


பிரம்மாண்ட வசூல்: கங்குவார் திரைப்படம் 3d தொழில்நுட்பத்தில் வெளியாக உள்ள நிலையில், 2.0 படத்துக்குப் பிறகு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் தமிழ் சினிமாவை மிகப்பெரிய உச்சத்துக்கு கொண்டு செல்லும் என பலரும் பாராட்டி வருகின்றனர். ப்ரீ புக்கிங்கும் உலகம் முழுவதும் சூடு பிடித்து வருகிறது.

ட்ரோல்களுக்கு பதிலடி: நடிகர் சூர்யாவுக்கும் பாக்ஸ் ஆபிஸுக்கு சம்பந்தமே கிடையாது என ஏகப்பட்ட ட்ரோல் குவிந்து வரும் நிலையில்கள் கங்குவா படத்தின் மிகப்பெரிய வெற்றி அதற்கு எல்லாம் பதிலடியாக இருக்கும் என சூர்யா ரசிகர்கள் சோசியல் மீடியாவில் கெத்துக்காட்டி வருகின்றனர். சூர்யாவின் தம்பி கார்த்தியும் இந்த படத்தில் மிகவும் முக்கியமான கதாபாத்திரத்தில் கேமியொவாக வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X