சிம்புவுக்கு மிகப்பெரிய கிஃப்ட் கொடுத்த சூர்யா.. இவ்வளவு தாராளத்துக்கு பின் இருக்கும் காரணம்?

சென்னை: நடிகர் சிம்பு தமிழ் சினிமாவில் மோஸ்ட் வான்டட் நடிகர். திறமை இருந்தும் சரியாக வெளிப்படுத்தாத நடிகர் என்று பலரும் இவரை விமர்சித்துள்ளனர். பெரும்பாலான ரசிகர்களை அசால்ட்டாக கட்டிப் போடும் ஸ்வாக் கொண்ட வெகு சில நடிகர்களில் சிம்புவும் ஒருவர். சக நடிகர்களுடன் எப்போதும் இணக்கமாக பழகும் குணம் கொண்ட சிம்புவுக்கு, நடிகர் சூர்யா பெரிய கிஃப்ட் ஒன்றை பரிசளித்துள்ளாராம்.

அதாவது தற்போது சூர்யா விஸ்வநாதன் சன்ஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வருகிறது. இந்த படத்தில் மமிதா பைஜு கதாநாயகியாக நடிக்கிறார். படத்தின் ப்ரோமோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படி இருக்கையில் சூர்யா நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள படம், இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் அவர் நடித்துள்ள படமான கருப்பு படம் தான். இந்த படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடித்துள்ளார்.

Suriya Gave Expensive Gift To STR Simbu For Karuppu Movie Opening Song Sung By Str

இந்த படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். படத்தின் டீசர் மற்றும் ஒரு பாடல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படி இருக்கையில் கருப்பு படத்தின் ஓப்பனிங் பாடலை நடிகர் சிம்பு தான் பாடி உள்ளாராம். இயக்குநர் சாய் அபயங்கர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, சிம்பு அந்த ஓபனிங் பாடலை பாடிக் கொடுத்துள்ளாராம். இது மட்டும் இல்லாமல் எடிட்டிங்கில் சிம்புவின் குரலிலும் கொஞ்சம் மாற்றங்கள் செய்துள்ளனராம். பாடலைக் கேட்ட மொத்த கருப்பு படக்குழுவினருக்கும் பிடித்துப் போனதாம். குறிப்பாக சூர்யாவுக்கு இந்த அளவுக்கு ஓபனிங் பாடல் அமைந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டதாம். மேலும் இதுவரை அவருக்கு இருந்த ஓபனிங் பாடல்களிலேயே இந்த பாடல்தான் ரசிகர்களால் அதிகம் பாராட்டப்படும் பாடலாக இருக்கும் என்ற பெரும் நம்பிக்கையிலும் மகிழ்ச்சியிலும் இருக்கிறாராம்.

சூர்யா : இப்படி இருக்கையில் நடிகர் சிம்புவுக்கு மரியாதை செய்யும் விதமாக மிகவும் விலை உயர்ந்த கிஃப்ட் ஒன்றை வாங்கி கொடுத்துள்ளாராம். மேலும் இந்த பாடலைப் பாடிக் கொடுக்க சிம்பு சம்பளம் ஏதுவும் வாங்காததால், இவ்வளவு அற்புதமாக இந்த பாடலைப் பாடியுள்ள சிம்புவுக்கு ஏதாவது கைமாறு செய்தே ஆக வேண்டும் என்று சூர்யா ஆசைப்பட்டதன் விளைவு தான் அந்த கிஃப்ட்டாம்.

Suriya Gave Expensive Gift To STR Simbu For Karuppu Movie Opening Song Sung By Str

அரசன்: சிம்பு தற்போது வெற்றி மாறன் இயக்கத்தில் நடித்து வரும் படமான அரசன் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் நடித்து வருகிறார். இந்த இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் பல நடிகர்களும் நடிகைகளும் இணைந்து உள்ளதாக கூறப்படுகிறது. முதல் கட்ட படப்பிடிப்பில் நடிகர் விஜய் சேதுபதி கலந்து கொண்டார். இவர்கள் இருவரும் ஏற்கனவே செக்கச் சிவந்த வானம் படத்தில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X