பெங்களூரில் ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கி ஒரு வகையாக சமாளித்த சூர்யா
பெங்களூர்: விளம்பர படத்தில் நடிக்க பெங்களூர் வந்த சூர்யா ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிக் கொண்டார். நடிகர் சூர்யா விளம்பரப்படம் ஒன்றில் நடிக்க யாருக்கும் தெரியாமல் ரகசியமாக பெங்களூர் வந்தார். பெங்களூர் அரண்மனையில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. அங்கு சூர்யா நடித்துக் கொண்டிருக்கும் செய்தி தீயாக ஊர் முழுவதும் பரவியது. விளைவு ரசிகர், ரசிககைகள் அங்கு வந்து குவிந்துவிட்டனர்.

புகைப்படம்
தன்னுடன் புகைப்படம் எடுக்க விரும்பியவர்களுக்கு சூர்யா போஸ் கொடுத்தார். அவர்களும் சந்தோஷமாக புகைப்படம் எடுத்துச் சென்றனர்.

மொய்ப்பு
ரசிகர்கள் சூர்யாவை மொய்த்தபோது அவர் கூறுகையில், முதலில் ரசிகைகள் புகைப்படம் எடுத்துக் கொண்டு செல்லட்டும் அதன் பிறகு ரசிகர்கள் அனைவருடனும் நின்று புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கிறேன் என்றார்.

பெங்களூர்
நான் அண்மையில் பெங்களூர் வந்தது இல்லை. அயன் படப்பிடிப்புக்காக கடைசியாக இங்கு வந்தது. எனக்கு இந்த ஊரின் கிளைமேட் பிடிக்கும் என்றார் சூர்யா.

மாஸ்
வெங்கட் பிரபுவுடன் வேலை செய்வது மகிழ்ச்சியாக உள்ளது. அவரது படங்களை நான் ரசித்து பார்த்துள்ளேன். இந்த படமும் நல்ல அனுபவமாக இருக்கும் என்று நம்புகிறேன் என்று கூறினார் சூர்யா.

பாலிவுட்
பாலிவுட் சென்றது ஒரு முறை அவுட்டிங். எனக்கு இங்கு உள்ள படங்கள், ரசிகர்கள் போதும். இதைவிட்டு நான் ஏன் எங்காவது செல்ல வேண்டும் என்று கேட்டார் சூர்யா.


Click it and Unblock the Notifications











