எதற்கும் துணிந்தவன் படக்குழுக்கு தங்கநாணயம் பரிசு… சூர்யாவின் எல்லை கடந்த அன்பு !

சென்னை : நடிகர் சூர்யா, எதற்கும் துணிந்தவன் படக்குழுவினரு 1 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நாணயத்தை பரிசாக அளித்துள்ளார்.

சூர்யா நடிப்பில் பாண்டிராஜ் இயக்கி வந்த படம் எதற்கும் துணிந்தவன். பிரியங்கா மோகன், சத்யராஜ், ராஜ்கிரண், சரண்யா பொன்வண்ணன் உள்பட பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். இப்படம் 2022 ஜனவரி மாதம் திரைக்கு வருகிறது.

எதற்கும் துணிந்தவன்

எதற்கும் துணிந்தவன்

இயக்குனர் பாண்டிராஜுடன் சூர்யா இரண்டாவது முறையாக எதற்கும் துணிந்தவன் படத்தில் இணைந்துள்ளார், சமூக பிரச்சனையை அடிப்படையாகக் கொண்டு உருவாகி உள்ள இப்படத்தில், வலுவான சமூகப் போராளியாக சூர்யா நடித்துள்ளார். மேலும், இப்படத்தில் பெண்களின் பாதுகாப்புக்காகப் போராடுகிறார். அவருக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். மேலும், சத்யராஜ், சரண்யா பொன் வண்ணன், சூரி மற்றும் சரண் ஆகியோர் லீட் ரோலில் நடித்துள்ளனர்.

படப்பிடிப்பு முடிந்தது

படப்பிடிப்பு முடிந்தது

எதற்கும் துணிந்தவன் படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்து விட்டதாக இயக்குனர் பாண்டிராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்றுபதிவிட்டு இருந்தார். அதோடு, சூர்யா, ஒளிப்பதிவாளர் ரத்னவேலு மற்றும் படக்குழுவினருக்கும் ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்திருந்த பாண்டிராஜ், எதற்கும் துணிந்தவன் அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

தங்கநாணயம் பரிசு

தங்கநாணயம் பரிசு

இந்நிலையில் , எதற்கும் துணிந்தவன் படப்பிடிப்பு முடிந்ததை அடுத்து, படக்குழுவினருக்கு நடிகர் சூர்யா தங்க நாணயத்தை பரிசாக அளித்துள்ளதாக கூறப்படுகிறது. எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்த அனைத்து நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு ரூ. 1 கோடி மதிப்பிலான தங்க நாணயங்களை பரிசாக அளித்து, படத்தை மறக்க முடியாத அனுபவமாக மாற்றியுள்ளார் சூர்யா.

ரசிகர்களிடம் வரவேற்பு

ரசிகர்களிடம் வரவேற்பு

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியானது. அதில், சூர்யா, வேஷ்டி சட்டையில் கையில் வாள், துப்பாக்கி போன்றவற்றை வைத்து கொண்டு ரத்தம் சொட்ட சொட்ட மாஸாக நின்றிருந்தார். இந்த மோஷன் போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் ஜனவரியில் திரைக்கு வர உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X