Kanguva: இப்படியொரு ரசிகையா? சூர்யாவை கண்டபடி திட்டிய நெட்டிசன்கள்.. பச்சை குத்திக்கொண்ட ரசிகை!

சென்னை: சூர்யாவின் கங்குவா படம் அவருக்கு பாராட்டுகளையும் புகழையும் அள்ளிக் கொடுக்கும் என நினைத்துக் கொண்டு இருந்தபோது, படம் சூர்யாவுக்கு பெரும் விமர்சனங்களைத்தான் பெற்றுத்தந்தது. கடந்த 14ஆம் தேதி ரிலீஸ் ஆன கங்குவா வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பெரும் விமர்சனங்களைப் பெற்றுத் தந்தது. இதனை படக்குழு எதிர்பார்க்கவில்லை. சூர்யாவை ரசிகர்கள் தொடங்கி இணையவாசிகள் வரை பலரும் கடுமையாக விமர்சித்தனர். குறிப்பாக ஒருவர் யூடியூப் தளத்தில் சூர்யாவை மிகவும் கடுமையாகவும் மோசமாகவும் விமர்சித்திருந்தார். இது மிகவும் வைரல் ஆனது.

suriya kanguva

இதுபோல் பலரும் தங்களது அதிருப்திகளையும் படத்தின் விமர்சனத்தினையும் தொடர்ந்து இணையத்தில் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக விஜய் ரசிகர்களும் இணைந்து சூர்யாவையும் கங்குவா படத்தினையும் தொடர்ந்து கேவலமாகவும் மோசமாகவும் விமர்சித்து வருகின்றனர். இதில் சூர்யாவுக்கு ஆதரவாக தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு இணையத்தில் தொடர்ந்து பல கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றார்.

suriya kanguva

ஏற்கனவே ஜோதிகா, தனஞ்ஜெயன் உள்ளிட்டோர் கங்குவா படம் குறித்தும் நெகடிவ் விமர்சனங்கள் குறித்தும் தங்களது கருத்துக்களைத் தெரிவித்தனர். இதுமட்டும் இல்லாமல், இவர்களின் கருத்துக்கு இணையவாசிகள் பதில் கருத்து சொல்ல, தனஞ்ஜெயன் கோபத்தில் வார்த்தைகளை விட்டுவிட, விஜய் ரசிகர்கள் அவரையும் ரவுண்டு கட்டிவருகின்றனர்.

suriya kanguva

பச்சை: இப்படியான நிலையில் தனது அபிமான நடிகருக்கு நான் துணை நிற்கின்றேன் என ரசிகை ஒருவர் செய்துள்ள செயல் பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. அதாவது கங்குவா படத்தின் ரிலீஸ்க்குப் பின்னர் பலரும் சூர்யாவை கண்டபடி விமர்சித்தனர். இப்படியான நிலையில் சூர்யாவின் மனநிலை மிகவும் பாதிப்படைந்திருக்கும் எனக் கருதிய ரசிகை, சூர்யாவின் படத்தினை தனது கையில் பச்சை குத்தியுள்ளார். இதுதொடர்பான வீடியோ வெளியாகி சூர்யா ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவி வருகின்றது.

suriya kanguva

பக்கபலம்: தான் பச்சை குத்திக் கொண்டது தொடர்பாக ரசிகை தெரிவிக்கையில், " எனக்கு சூர்யாவை ரொம்ப பிடிக்கும். ஆனால் ஒருநாளும் அவருக்காக பச்சை குத்திக் கொள்ளவேண்டும் என நினைத்தது கிடையாது. ஆனால் கங்குவா படம் ரிலீஸ் ஆன பின்னர், பலரும் சூர்யாவை மிகவும் மோசமாக விமர்சித்தார்கள். அது எனக்கு வருத்தத்தைக் கொடுத்தது. எனவே சூர்யாவிற்கு ஒரு ரசிகையாக எனது அன்பைத் தெரிவிக்க அவரது உருவப்படத்தினை எனது கையில் பச்சை குத்திக் கொள்ள முடிவு செய்தேன். சூர்யாவின் ரசிகையாக அவருக்கு எப்போதும் பக்கபலமாக இருப்பேன்" எனக் கூறினார்.

suriya kanguva

வீடியோ: இதனைப் பார்த்த சூர்யாவின் ரசிகர்கள் எப்போதும் சூர்யாவுக்கு உறுதுணையாக இருப்போம் எனக் கமெண்ட் செய்தும், ரசிகைக்கு வாழ்த்து தெரிவித்தும் வருகின்றனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது. இதனை சூர்யா ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

suriya kanguva

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X