தல ஸ்டைலில் காப்பான் படக்குழுவுக்கு பிரியாணி விருந்து கொடுத்த சூர்யா
Recommended Video

சென்னை: காப்பான் படக்குழுவுக்கு பிரியாணி விருந்து கொடுத்து அசத்தியுள்ளார் சூர்யா.
கே.வி. ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படம் காப்பான். இந்த படத்தில் ஆர்யா, மோகன்லால், சயீஷா, பாலிவுட் நடிகர் போமன் இரானி, சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

பிரியாணி விருந்து
காப்பான் படக்குழுவுக்கு தன் செலவில் பிரியாணி விருந்து கொடுத்துள்ளார் சூர்யா. படக்குழுவுக்கு அவர் தன் கையாலேயே பிரியாணி பரிமாறியபோது எடுத்த புகைப்படம் வெளியாகியுள்ளது.

ரசிகர்கள்
வழக்கமாக படக்குழுவுக்கு பிரியாணி சமைத்து தன் கையால் பரிமாறுவதை வழக்கமாக வைத்துள்ளார் அஜித். இந்நிலையில் சூர்யா பிரியாணி விருந்து கொடுத்ததை பார்த்து அவரின் ரசிகர்கள் பெருமை அடைந்துள்ளனர். தான் பெரிய ஸ்டார் என்ற பந்தா இல்லாமல் பிரியாணி பரிமாறியுள்ளார் சூர்யா என்கிறார்கள் அவரின் ரசிகர்கள்.

திருப்தி
காப்பான் படத்திற்காக சூர்யா ஒட்ட முடிவெட்டியுள்ள லுக் அவரின் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துள்ளது. லைகா நிறுவனம் தயாரித்துள்ள காப்பான் படம் சுதந்திர தினத்தையொட்டி ரிலீஸாகும் என்று கூறப்படுகிறது. அயன், மாற்றான் படங்களை அடுத்து கே.வி. ஆனந்த், சூர்யா ஒன்று சேர்ந்துள்ள படம் காப்பான் என்பது குறிப்பிடத்தக்கது.

மோகன்லால்
காப்பான் படத்தில் தன் பகுதியை நடித்து முடித்துவிட்டார் மோகன்லால். படத்திற்கு கே.வி. ஆனந்துடன் சேர்ந்து கபிலன் வைரமுத்துவும், பட்டுக்கோட்டை பிரபாகரும் சேர்ந்து வசனம் எழுதியுள்ளனர். காப்பானுக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











