ரொம்ப தெளிவு: மீடியா மீது பழியை போட்டு காப்பான் அப்டேட் கொடுத்த சூர்யா
சென்னை: காப்பான் படம் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்களை தெரிவித்துள்ளார் சூர்யா.
கே.வி. ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, மோகன்லால், ஆர்யா, சயீஷா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் காப்பான். இந்நிலையில் மோகன்லால் கலந்து கொண்ட பேட்டியில் சூர்யா ஃபேஸ்புக் லைவ் மூலம் வந்து பேசினார்.
அப்பொழுது படம் குறித்து சூர்யா சில தகவல்களை வெளியிட்டுள்ளார்.

காப்பான்
காப்பான் கதை பற்றி ஏதாவது சொல்லுங்கள் என்று பேட்டி எடுத்தவர் கேட்க அதெல்லாம் சொல்லக் கூடாது என்று மோகன்லால் வேகமாக தெரிவித்தார். ஆனால் சூர்யா கதை, கதாபாத்திரங்கள் பற்றி தெரிவித்தார்.

சூர்யா
சூர்யா ரொம்பவே தெளிவு. கதை, கதாபாத்திரங்கள் பற்றி மீடியாவில் ஏற்கனவே கசிந்ததை சொல்கிறேன் என்று கூறினார். காப்பான் படத்தில் மோகன்லால் பிரதமராக நடித்துள்ளார். நான் அவரின் தலைமை பாதுகாப்பு அதிகாரியாக நடித்துள்ளேன் என்றார்.

ரிலீஸ்
கதை விஷயத்தில் சூதானமாக இருந்த மோகன்லால் காப்பான் ரிலீஸ் தேதி ஆகஸ்ட் 15 என்று உளறிவிட்டார். ஆனால் சூர்யாவோ ஆகஸ்ட் மாதம் விடுமுறையின்போது படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளோம் என்று கூறி சமாளித்தார்.

கேரளா
அந்த பேட்டியில் மோகன்லால் சூர்யாவை புகழ, சூர்யா மோகன்லாலை புகழ ஒரே புகழ்ச்சியாக இருந்தது. நான் நேரடி மலையாள படத்தில் நடிப்பதாக இருந்து அது நடக்காமல் போனது. நிச்சயம் மலையாள படத்தில் நடிப்பேன் என்று தெரிவித்தார் சூர்யா.

போன்
மோகன்லால் சார் ஒரு லெஜன்ட். எனக்கு எப்பொழுது வேண்டுமானாலும் நீங்கள் போன் பண்ணலாம். நான் இருக்கிறேன் என்பதை மறக்க வேண்டாம் என்று அவர் போன்று யார் சொல்வார் என சூர்யா நெகிழ்ந்தார்.


Click it and Unblock the Notifications











