அஜித்துடன் மோதும் சூர்யா.. தீபாவளிக்கு வருது அருவா.. 6வது முறையாக இணையும் கூட்டணி!

சென்னை: இயக்குநர் ஹரியுடன் 6வது முறையாக சூர்யா இணைந்து நடிக்கும் படம் குறித்த அசத்தலான அப்டேட் தற்போது வெளியாகி உள்ளது.

சூர்யாவின் சூரரைப் போற்று படத்தின் ரிலீஸ் தேதியை கேட்டு, சூர்யா ரசிகர்கள் காலையில் இருந்தே ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வந்தனர்.

இந்நிலையில், தற்போது சூர்யாவின் 39வது படத்தின் தலைப்பு மற்றும் ரிலீஸ் தேதியை தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

ஹரி இயக்கத்தில்

சுதா கொங்கரா இயக்கத்தில், சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், சூர்யாவின் அடுத்த படத்தை இயக்குநர் ஹரி இயக்கப் போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தற்போது வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

இப்படியொரு டைட்டிலா?

இப்படியொரு டைட்டிலா?

ஹரி இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ள இந்த படத்திற்கு ‘அருவா' என்ற வெறித்தனமான டைட்டில் வைக்கபட்டுள்ளது. ஏற்கனவே இந்த தலைப்பை சூர்யாவின் தம்பி கார்த்திக்காக இயக்குநர் ஹரி முடிவு செய்து வைத்திருந்ததாகவும், தற்போது, அந்த தலைப்பு சூர்யாவுக்கு சென்றுள்ளது என்ற தகவல்களும் வைரலாகி வருகின்றன.

வலிமையுடன் மோதல்

வலிமையுடன் மோதல்

விஜய்யின் மாஸ்டர் படத்துடன் சூர்யாவின் சூரரைப் போற்று மோதுமா? என ரசிகர்கள் எதிர்பார்த்து, வரும் நிலையில், சூர்யாவின் ‘அருவா' திரைப்படம் வரும் தீபாவளிக்கு ரிலீஸ் என படக்குழு அறிவித்துள்ளது. ஏற்கனவே அஜித்தின் வலிமை படம் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதால், நிச்சயம் பெரிய கிளாஷ் இருக்கும் என்றே தெரிகிறது.

6வது முறை

இயக்குநர் ஹரி - சூர்யா கூட்டணியில், 2005ம் ஆண்டு ஆறு படம் வெளியானது. 2007ம் ஆண்டு வேல் படம் வெளியாகி பிளாக்பஸ்டர் ஆனது. 2010, 2013 மற்றும் 2017ம் ஆண்டுகளில் சிங்கம், சிங்கம் 2 மற்றும் சிங்கம் 3 என அடுத்தடுத்து சூர்யாவுக்கு ஹிட் கொடுத்தார். இந்நிலையில், வரும் தீபாவளிக்கு அருவா ரிலீஸ் ஆகிறது.

அப்போ வாடிவாசல்

அப்போ வாடிவாசல்

வெற்றி மாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் திரைப்படம் உருவாகும் என்ற அப்டேட் சமீபத்தில் வெளியாகி வைரலானது. மேலும், அடுத்த பொங்கலுக்கு வாடிவாசல் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அந்த படம் என்ன ஆனது என்ற சந்தேகம் கிளம்பியுள்ளது.

முதன்முறை

முதன்முறை

ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பில், ஹரி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாக உள்ள அருவா திரைப்படம் வரும் ஏப்ரலில் ஷூட்டிங் ஆரம்பிக்கப்பட்டு, தீபாவளிக்கு ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதன்முறையாக சூர்யாவுக்கு இந்த படத்தில் இமான் இசையமைக்க உள்ளார். ஹீரோயின் குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X