Don't Miss!
- Technology
108எம்பி ரியர் கேமரா கொண்ட புதிய ஒப்போ 5G போனின் அறிமுக தேதி வெளியானது.! ரெடியா இருங்க..!
- News
காதலுக்கு எல்லை கிடையாது.. கடல் கடந்த காதல்.. ஹாங்காங் பெண்ணை மணந்த புதுக்கோட்டை இளைஞர்
- Sports
திறமைகளை வளர்த்து கொள்ளுங்கள்.. இல்லை சூர்யகுமாரால் ஆபத்து வரும்.. நெஹ்ரா கொடுத்த எச்சரிக்கை
- Finance
அபாண்டம்.. ஹிண்டர்ன்பர்க் மீது சட்டபூர்வ நடவடிக்கை.. அதானியால் குழப்பத்தில் முதலீட்டாளர்கள்!
- Automobiles
ஷோரூம்களுக்கு வர தொடங்கிய மாருதியின் விலை குறைவான கார்! திருவிழா மாதிரி பொதுமக்கள் கூட்டம் கூடுதாம்!
- Lifestyle
சாணக்கிய நீதியின் படி இந்த நபர்கள் எதிரிகளை விட ஆபத்தானவர்களாம்... இவங்கள பக்கத்துலேயே சேர்க்காதீங்க...!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
கோவிலில் மண்டியிட்டு எனக்காக வேண்டியவர் சூர்யா ... கண்கலங்கிய கருணாஸ்!
சென்னை : எதார்த்தமான நடிப்பை தனது ஒவ்வொரு படங்களிலும் வெளிப்படுத்தி வருகிறார் நடிகர் கருணாஸ்
காமெடியனாக மட்டுமல்லாமல் ஹீரோவாகவும் திண்டுக்கல் சாரதி, அம்பாசமுத்திரம் அம்பானி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்
இந்நிலையில் பட விழா ஒன்றில் பேசிய கருணாஸ் தனக்காக சூர்யா கோவிலில் மண்டியிட்டு வேண்டியதாக கண்கலங்கி பேசியுள்ளார்.
யப்பா
சாமி
என்ன
இது?
புடவை
கட்டினா
ஈவ்
டீஸிங்கா...ஜீ
தமிழ்
சீரியலுக்கு
சின்மயி
கேள்வி!

ஜல்லிக்கட்டை மையப்படுத்தி
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் சூர்யாவிற்கு தமிழைத் தொடர்ந்து மலையாளம் மற்றும் தெலுங்கிலும் மிகப் பெரிய வரவேற்பு இருக்கிறது தமிழில் சூர்யா நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் அனைத்தும் தெலுங்கு மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி மிகப்பெரிய வசூல் சாதனைகளை செய்து வருகிறது. எதற்கும் துணிந்தவன் வெற்றி பெற்றதை தொடர்ந்து இப்பொழுது வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடித்து வருகிறார் முற்றிலும் கிராமத்து கதை களத்தில் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான ஜல்லிக்கட்டை மையப்படுத்தி இப்படம் உருவாகி வருகிறது. இதன் படப்பிடிப்பு மதுரையில் நடைபெற்று வருகிறது

நந்தா
இப்பொழுது தமிழ் சினிமாவில் உச்ச இடத்தை எட்டியுள்ள சூர்யா ஆரம்பத்தில் நடித்த படங்கள் சுமாரான வெற்றியை மட்டுமே பெற்று தந்தது இந்த நிலையில் பாலா இயக்கத்தில் சூர்யா முரட்டுத்தனமான ரவுடியாக நடித்த நந்தா திரைப்படம் அவரது வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. நந்தா வெற்றிக்கு பிறகு சூர்யா நடிப்பில் வெளியான அனைத்து திரைப்படங்களும் தொடர்ச்சியாக வெற்றி பெற்றது.

கருணாஸ் காமெடியனாக
நந்தாவில் காமெடியனாக நடிகர் கருணாஸ் லொடுக்கு பாண்டி என்ற கதாபாத்திரத்தில் மிகச் சிறப்பாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்களை பெற்றிருப்பார் நாட்டுப்புற பாடல்களை பாடி தமிழ் ரசிகர்கள் மத்தியில் நன்மதிப்பை பெற்ற கருணாஸ் நந்தா படத்தின் மூலம் அறிமுகமானதைத் தொடர்ந்து பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. காமெடியனாக கலக்கிக் கொண்டிருந்த அதே சமயம் திண்டுக்கல் சாரதி மற்றும் அம்பாசமுத்திரம் அம்பானி உள்ளிட்ட படங்களில் ஹீரோவாகவும் நடித்தார். இரண்டு படங்களும் வெற்றியைப் பெற்றுத் தந்தது.

சூர்யா கோவிலில் மண்டியிட்டு
இந்த நிலையில் கருணாஸ் சூர்யாவுடன் இணைந்து நந்தாவில் நடித்துக் கொண்டிருந்தபோது கருணாஸின் மனைவி கர்ப்பமாக இருந்துள்ளார். கருணாஸ் படப்பிடிப்பில் இருந்தபோது குழந்தை பிறக்க நேரிட்டது அப்பொழுது மனைவியை காண முடியாமல் தவித்த கருணாஸுக்காக ராமேஸ்வரம் கோவிலில் மண்டியிட்டு கடவுளின் முன்பு தாயும் சேயும் நலமுடன் இருக்க வேண்டும் என தனக்காக சூர்யா வேண்டிக் கொண்டதை நினைவுகூர்ந்து பட விழா ஒன்றில் நடிகர் கருணாஸ் கண்கலங்கி பேசியுள்ளார்.