twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மதுரையில் சூர்யா 40 படப்பிடிப்பு...கொரோனா கட்டுப்பாடுகளால் திணறும் பாண்டிராஜ்

    |

    சென்னை : கொரோனாவில் இருந்து மீண்ட பிறகு, பாண்டிராஜ் இயக்கும் 'சூர்யா 40' படத்தில் இணைந்துள்ளார் சூர்யா. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு பூஜை போடுவதற்கு சில நாட்களுக்கு முன்பு தான் சூர்யாவிற்கு கொரோனா தொற்று ஏற்பட்டது கண்டறியப்பட்டது.

    Suriya heads to Madurai for the shoot of his next

    இதனால் படத்தின் பூஜையில் சூர்யாவால் கலந்து கொள்ள முடியவில்லை. இதனால் படத்தின் வேலைகளும் மந்தமாக நடைபெற்றது. பிற நடிகர், நடிகைகளை வைத்து சில காட்சிகள் எடுக்கப்பட்டன. சமீபத்தில் கொரோனாவில் இருந்து மீண்ட சூர்யா, சூட்டிங்கில் கலந்து கொண்டு வருகிறார்.

    Suriya heads to Madurai for the shoot of his next

    லேட்டஸ்ட் தகவலாக, இந்த படத்தின் அடுத்தகட்ட சூட்டிங் மதுரையில் நடத்தப்பட உள்ளது. தமிழகத்தின் புகழ்பெற்ற கோயில்கள் பலவும் மதுரை மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் அமைந்துள்ளதால் இங்கு படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளனர். ஆனால் கொரோனா பரவல் காலம் என்பதால் விதிக்கப்பட்டுள்ள பல கட்டுபாடுகள் டைரக்டர் பாண்டிராஜிற்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது.

    கட்டுப்பாடுகள் காரணமாக கேரளாவை போன்று செட் அமைக்கப்பட்டு, தற்போது படப்பிடிப்பு நடத்தப்பட்டு வருகிறது. இதில் பாரம்பரிய உடையில், நீண்ட முடியுடன் சூர்யா நடித்து வருகிறார். அதே சமயம் சூர்யாவின் பிரத்யேக ஸ்டில் ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த விறுவிறுப்பான ஃபோட்டோவை ரசிகர்கள் வேகமாக பகிர்ந்து வருகின்றனர்.

    Recommended Video

    Karthi வாய்ப்பு தேடுறவங்களுக்கு உதவுறாரு | Family Audienceக்கு இந்த Movie | Sulthan Pressmeet

    'சூர்யா' 40 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் ஹீரோயினாக பிரியங்கா மோகனன் நடிக்கிறார். இவர்களுடன் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, ஜெயபிரகாஷ், இளவரசு உள்ளிட்ட 40 புகழ்பெற்ற நடிகர், நடிகைகள் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

    English summary
    Suriya has headed to Madurai to shoot for the film's next schedule.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X