சூர்யா ஜாதகத்துலயே அது இருந்துச்சு.. பைத்தியக்காரன்னு திட்டினேன்.. சிக்ஸ்பேக்.. சிவகுமார் பேச்சு!
சென்னை: ரெட்ரோ படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. அதில், கலந்துக் கொண்ட சூர்யாவின் அப்பா சிவகுமார் மேடையேறி பேசும் போது நடிகர் சூர்யா சினிமாவுக்கு வருவதற்கு முன்னதாக ஜோசியர் ஒருவர் சூர்யாவின் ஜாதகத்தை பார்த்து நடிகராவார் என்று கூறினார் என்றார்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ், நாசர் உள்ளிட்ட பலர் நடித்த ரெட்ரோ திரைப்படம் வரும் மே 1ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

ரெட்ரோ படத்தின் கண்ணாடிப் பூவே, கனிமா பாடல்கள் வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்துள்ளன. மேலும், சில பாடல்கள் இன்று நடைபெற்ற ஆடியோ வெளியீட்டு விழாவில் வெளியாகின. மேலும், படத்தின் அதிரடியான டிரைலரும் வெளியானது.
கங்குவா கல்லா கட்டல: கங்குவா படத்தின் இசை வெள்யீட்டு விழா கடைசியாக இதே நேரு ஸ்டேடியத்தில் தான் நடைபெற்றது. ஆடியோ லாஞ்ச் டிக்கெட்டை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள் வெற்றி விழாவுக்கு அதை கொண்டு வந்தே உள்ளே வரலாம் என்று பேசியது படம் வெளியானதும் பயங்கர ட்ரோல் ஆனது. இந்நிலையில், ரெட்ரோ படம் கண்டிப்பாக அந்த ட்ரோல்களுக்கு எல்லாம் பதிலடி கொடுக்கும் என தெரிகிறது. டிரைலர் அந்தளவுக்கு ஃபிரெஷ்ஷாகவும் பட்டாசாகவும் உள்ளது.
சிவகுமார் பேச்சு: நடிகர் சூர்யாவின் தந்தையும் தமிழ் சினிமாவின் மார்கண்டேயர் என அழைக்கப்படும் நடிகர் சிவகுமார் மேடையேறி பேசிய பேச்சு ரசிகர்களை கூஸ்பம்ப்ஸ் ஆக்கியது. தமிழ் சினிமாவில் முதன்முறையாக சிக்ஸ்பேக் வைத்து நடித்த நடிகர் சூர்யா தான் என்றும் அவருக்குப் பிறகு பல நடிகர்கள் சிக்ஸ் பேக் வைத்து நடித்தார்கள். ஆனால், அது தவறு என்றும் அதன் பின்னர் அறிவுரை வழங்கியதும் சூர்யா தான் என்றார்.

ஜாதகத்திலேயே இருக்கு: நடிகர் சூர்யாவுக்கு சினிமாவில் எல்லாம் நாட்டமே இல்லை. அவர் கார்மெண்ட்ஸ் கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். ஒருமுறை என்னோட நண்பர் வீட்டுக்கு வந்தார். அவர் ஒரு ஜோசியர். சூர்யா மற்றும் கார்த்தியின் ஜாதகத்தை பார்த்தார். சூர்யா ஜாதகத்தை பார்த்த அவர் இவர் சினிமாவில் கலக்குவார் என்றார். இயக்குநராக ஆவாரா? அல்லது கேமராமேன் ஆவாரா? எனக் கேட்டேன். இல்லை முகத்தை வைத்து பார்க்கும் வேலை என்றார். அப்போ நடிகனா என்றேன். ஆம், எனக் கூற லூசாய்யா நீ அவனுக்கு அதுல கொஞ்சம் கூட இஷ்டமே இல்லை என்றேன். ஆனால், அதன் பின்னர் இயக்குநர் வசந்த் ஒருமுறை விமான நிலையத்தில் சூர்யாவை சந்தித்த நிலையில், போட்டோ டெஸ்ட் பண்ணனும் என்றார். டெஸ்ட் பண்ணிட்டு வேண்டாம்னு சொன்னா மனசு கஷ்டம் ஆகும். இப்பவே நோ சொல்லிடுங்க என்றேன். 200 சதவீதம் நம்பிக்கை இருக்கு சூர்யா நல்லா பண்ணுவாருன்னு நேருக்கு நேர் படத்துல நடிக்க வச்சாரு அதன் பிறகு ஒவ்வொரு இயக்குநரும் சூர்யாவை செதுக்கி இன்றைக்கு இந்த இடத்துக்கு கொண்டு வந்திருக்கின்றனர். அத்தனை பேருக்கும் நன்றி என்றார்.
கண்கலங்கிய சூர்யா: தன்னை பற்றி அப்பா பெருமையோடு பேசுவதை கேட்டு நடிகர் சூர்யா கண்கலங்கிய காட்சிகளை க்ளோஸ் அப்பில் ஜூம் அடித்து கேமரா மேன் அழகாக காட்டிய தருணங்கள் ரசிகர்களை ரொம்பவே எமோஷனலாக்கியது.


Click it and Unblock the Notifications











