»   »  சிங்கம் போல வருமா!: சூர்யா புகழ்பாடும் விக்னேஷ் சிவன்

சிங்கம் போல வருமா!: சூர்யா புகழ்பாடும் விக்னேஷ் சிவன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சூர்யாவை பொது நிகழ்ச்சிகளில் தான் பார்த்துள்ளேன். அவருடன் சேர்ந்து பணியாற்றுவேன் என்று நினைத்துக் கூட பார்த்தது இல்லை என்று இயக்குனர் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.

நயன்தாராவின் காதலரான விக்னேஷ் சிவன் சூர்யாவை வைத்து படம் இயக்குகிறார். விக்னேஷுக்கு சூர்யா ஓகே சொன்னதற்கு பின்னால் நயன்தாரா இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் படம் மற்றும் சூர்யா குறித்து விக்னேஷ் கூறுகையில்,

ஞானவேல் ராஜா

ஞானவேல் ராஜா

நான் நானும் ரவுடி தான் படத்தை முடித்த பிறகு ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா எனக்கு போன் செய்து பேசினார். பின்னர் தான் சூர்யாவுடன் படம் பண்ணும் ஐடியா வந்தது.

சூர்யா

சூர்யா

முழுக் கதையையும் முடித்த பிறகு சூர்யாவை சந்தித்து கதை சொன்னேன். அவருக்கு கதை பிடித்துவிட்டது. அவர் மிகவும் அடக்கமானவர். அவர் என்னை ஊக்குவித்ததால் ஒரு பெரிய நடிகரிடம் கதை சொல்கிறோமே என்ற பதட்டம் எனக்கு ஏற்படவில்லை.

சிம்பு

சிம்பு

நான் சிம்பு, விஜய் சேதுபதி ஆகிய இரண்டு சிறந்த நடிகர்களுடன் பணியாற்றியுள்ளேன். சூர்யாவை பொது நிகழ்ச்சிகளில் மட்டுமே பார்த்துள்ளேன். அப்படிப்பட்ட சூர்யாவுடன் நான் படம் பண்ணுவேன் என நினைத்துப் பார்க்கவே இல்லை.

இளம் இயக்குனர்கள்

இளம் இயக்குனர்கள்

சூர்யா போன்ற நடிகர்கள் இளம் இயக்குனர்களுக்கு வாய்ப்பு அளிப்பது நல்ல விஷயம். சூர்யா நடிக்கும் படம் நான் ரவுடி தான் போன்று காமெடி, காதல், ஆக்ஷன் என அனைத்தும் கலந்து இருக்கும். ரசிகர்களுக்கு பக்கா பொழுதுபோக்காக இருக்கும்.

English summary
Director Vignesh Shivan who is set to work with Suriya couldn't stop praising his hero.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X