ரோலெக்ஸ் லுக்கிற்கு காரணம் இவங்க தான்.. யாரை பாராட்டி இருக்காரு பாருங்க சூர்யா!
சென்னை: விக்ரம் படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் வெறித்தனமான என்ட்ரி கொடுக்கும் ரோலெக்ஸ் கதாபாத்திரத்தின் லுக்கிற்கு காரணமானவரை அடையாளம் காட்டி நன்றி தெரிவித்துள்ளார் நடிகர் சூர்யா.
சினிமாவில் கேமராவுக்கு பின் ஏகப்பட்ட கலைஞர்களின் பெரும் உழைப்பு கொட்டிக் கிடக்கிறது.
ஆனால், ரசிகர்கள் திரையில் பார்ப்பவர்களையும் சில முன்னணி டெக்னீஷியன்களை மட்டுமே வெகுவாக கொண்டாடுவார்கள். சில முக்கியமான திறமையாளர்களை ஆன்ஸ்க்ரீனில் அப்ளாஸ் அள்ளும் ஹீரோக்கள் பொதுவெளியில் அடையாளம் காட்டாமல் விட்டு விடுவது தான் அதற்கு உண்மையான காரணம்.

ரோலெக்ஸ் ரோல்
நடிகர் சூர்யா ஹீரோவாக எத்தனையோ படங்களில் நடித்துள்ளார். வில்லனாக 24 படத்தில் ஆத்ரேயாவாகவும் நடித்து மிரட்டி உள்ளார். ஆனால், முதன்முறையாக கமல்ஹாசன் படத்தில் இப்படியொரு வெறித்தனமான நெகட்டிவ் ரோலில் சூர்யா நடித்ததை பார்த்து ரசிகர்கள் மிரண்டே போய் விட்டனர். ரோலெக்ஸாக கடைசி ஒரு 3 நிமிடங்கள் வந்து திரையை தீப்பிடிக்க வைத்துள்ளார்.

ரோலெக்ஸுக்கு ரோலெக்ஸ்
கமல்ஹாசன் உடன் இணைந்து படத்தின் ஷூட்டிங் ஆரம்பித்ததில் இருந்தே நடித்து வரும் விஜய்சேதுபதி மற்றும் பகத் ஃபாசிலுக்கு எந்தவொரு பரிசும் வழங்காத நிலையில், சம்பளமே வாங்காமல் பணியாற்றிய நடிகர் சூர்யாவுக்கு தன்னுடைய ரோலெக்ஸ் வாட்ச்சையே பரிசாக வழங்கினார் கமல்.

300 கோடியை நோக்கி
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய்சேதுபதி, பகத் ஃபாசில், சூர்யா, நரேன், காளிதாஸ் ஜெயராம், ஷிவானி நாராயணன், மைனா நந்தினி, ஸ்வாதிஷ்டா மற்றும் பலர் நடிப்பில் கடந்த ஜூன் 3ம் தேதி வெளியான விக்ரம் திரைப்படம் இதுவரை 270 கோடி வசூல் செய்திருப்பதாகவும் இந்த வார இறுதியில் 300 கோடி வசூலை தட்டித் தூக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ரோலெக்ஸ் லுக்கிற்கு காரணம்
இந்நிலையில், நடிகர் சூர்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரோலெக்ஸ் லுக்கிற்கு நன்றி என மேக்கப் ஆர்ட்டிஸ்ட் செரினா டிக்ஸெரியாவுடன் விக்ரம் படப்பிடிப்பில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு நன்றி கூறியுள்ளார். ஆட்டுத் தாடி, காதில் கடுக்கன், உடல் முழுக்க ரத்தம் என வெறித்தனமாக நடித்து விட்டு செம ஜாலியாக மேக்கப் ஆர்ட்டிஸ்ட் உடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார் சூர்யா.

ரசிகர்கள் பாராட்டு
விக்ரம் 3ம் பாகத்துக்கான லீடு கொடுக்கும் கதாபாத்திரமான ரோலெக்ஸ் கதாபாத்திரத்திற்கான மெர்சலான லுக்கை வடிவமைத்த ஒப்பனை கலைஞர் செரினாவை ரசிகர்கள் மனமார பாராட்டி வருகிறார்கள். அடுத்த பாகத்திலும் உங்கள் உழைப்பு மேலும், சிறக்க வாழ்த்துக்கள் என குறிப்பிட்டு வருகின்றனர்.

வாடிவாசல் எப்போ
இயக்குநர் பாலாவுடன் சூர்யா 41 படத்தை முடிக்க உள்ள நடிகர் சூர்யா அடுத்ததாக வாடிவாசல் படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இடையே ரசிகர்கள் மத்தியில் உருவாகி உள்ள ரோலெக்ஸ் ஃபீவர் காரணமாக சட்டுபுட்டுன்னு இன்னொரு படத்தையும் முடித்து விடுவாரோ என்கிற கேள்விகளும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளன.


Click it and Unblock the Notifications











