கொரோனாவில் இருந்து மீண்டார் சூர்யா.. அண்ணா நலமுடன் வீடு திரும்பியதாக நடிகர் கார்த்தி ட்வீட்!

சென்னை: கொரோனா பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் சூர்யா நலமுடன் வீடு திரும்பியதாக நடிகர் கார்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

கடந்த பிப்ரவரி 7ம் தேதி தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதை நடிகர் சூர்யா சமூக வலைதளத்தில் அறிவித்தார்.

நடிகர் சூர்யாவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அறிந்த ரசிகர்களும் பிரபலங்களும் அவர் விரைவில் குணமடைய பிரார்த்தனைகளை மேற்கொண்டனர்.

கொரோனா பாதிப்பு

கொரோனா பாதிப்பு

'கொரோனா' பாதிப்பு ஏற்பட்டு, சிகிச்சை பெற்று நலமுடன் இருக்கிறேன். வாழ்க்கை இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை என்பதை அனைவரும் உணர்வோம். அச்சத்துடன் முடங்கிவிட முடியாது. அதேநேரம் பாதுகாப்பும், கவனமும் அவசியம். அர்ப்பணிப்புடன் துணைநிற்கும் மருத்துவர்களுக்கு அன்பும், நன்றிகளும். என நடிகர் சூர்யா கடந்த 7ம் தேதி ட்வீட் போட்டு அறிவித்தார்.

ரசிகர்கள் பிரார்த்தனை

ரசிகர்கள் பிரார்த்தனை

நடிகர் சூர்யாவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அறிந்த சினிமா பிரபலங்களும் ரசிகர்களும் அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என பிரார்த்தனை செய்தனர். கெட் வெல் சூன் சூர்யா என ஹாஷ்டேக்குகளும் ட்விட்டரில் டிரெண்ட் செய்யப்பட்டன.

அண்ணா வீட்டுக்கு வந்துட்டாரு

அண்ணா வீட்டுக்கு வந்துட்டாரு

இந்நிலையில், தற்போது நடிகர் சூர்யாவின் தம்பியும் நடிகருமான கார்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் அண்ணா குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். எந்த பிரச்சனையும் இல்லை. சில நாட்கள் வீட்டில் தனிமைப்பட்டு பின்னர், இயல்பு நிலைக்கு திரும்புவார் என்றும் சூர்யாவுக்காக பிரார்த்தனை செய்த ரசிகர்களுக்கு பிரபலங்களுக்கும் நன்றி என்றும் கூறியுள்ளார்.

சந்தோஷத்தில் ரசிகர்கள்

சந்தோஷத்தில் ரசிகர்கள்

சூர்யா கொரோனா பாதிப்பில் இருந்து பூரணமாக குணமடைந்து வீடு திரும்பிய செய்தியை அறிந்த சூர்யா ரசிகர்கள், நடிகர் கார்த்திக்கு நன்றி தெரிவித்து ஏகப்பட்ட கமெண்ட்டுகளை போட்டு வருகின்றனர். வாடிவாசல், பாண்டிராஜ் படம் என அடுத்தடுத்து பட வேலைகளிலும் சூர்யா பிசியாக உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X