என்ஜாயி எஞ்சாமி.. விழுந்து விழுந்து விடாமல் கேட்கிறேன்.. லயித்துப் போன சூர்யா!
சென்னை : 'என்ஜாய் எஞ்சாமி' என்ற சிங்கிள் பாடல் ஆல்பத்தை அறிவு மற்றும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் மகள் தீ இணைந்து செய்திருந்தனர். சமீபத்தில் வெளியிடப்பட்ட இந்த பாடல் இணையத்தில் வைரலானது.

வெளியிடப்பட்டது முதல் அனைத்து தரப்பினரையும் கவர்ந்து, திரும்பிய பக்கமெல்லாம் இப்பாடல் ஒலிக்க துவங்கியது. பாடல் இசை, தீயின் குரல், ஒலிப்பதிவு செய்யப்பட்ட, அதில் நடித்தவர்களின் உடை என அனைத்தும் மிகுந்த பாராட்டை பெற்றது.

பிரபலங்கள் பலரும் இந்த பாடலுக்கு நடனமாடி, அந்த வீடியோக்களும் இணையத்தில் வைரலாகின. இதில் லேட்டஸ்ட்டாக நடிகர் சூர்யா, இந்த பாடலை வெகுவாக பாராட்டி ட்வீட் செய்துள்ளார்.
சில வாரங்களுக்கு முன் யூட்யூட்டில் வெளியிடப்பட்ட இந்த பாடல் இதுவரை கோடிக்கண்கான பார்வைகளையும், லைக்குகளையும் அள்ளி உள்ளது. அதிகம் பார்க்கப்பட்ட பாடல்களில் 'மாஸ்டர்' படத்தின் 'வாத்தி கம்மிங்' பாடலின் சாதனையை விரைவில் இந்த பாடல் முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











