#Kaappaan ஆக மாறிய சூர்யா: ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்
சென்னை: கே.வி. ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்திற்கு காப்பான் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
கே.வி. ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படத்தின் பெயர் புத்தாண்டு அன்று அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்கள். அதே போன்று புத்தாண்டு பரிசாக சூர்யா படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.
படத்திற்கு காப்பான் என்று பெயர் வைத்துள்ளனர்.
காப்பான்
சூர்யா நடித்து வரும் காப்பான் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் மோகன்லால், ஆர்யா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறப்பு
சூர்யா 37 படத்தின் தலைப்போடு சேர்த்து ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும், மற்றொரு போஸ்டரும் வெளியானதில் சூர்யா ரசிகர்கள் செம ஹேப்பி அண்ணாச்சி.

செல்வராகவன்
செல்வராகவன் போன்று கெஞ்சவிடாமல் காப்பான் பற்றி அடிக்கடி அப்டேட் கிடைக்கும் என்று நம்புகிறார்கள் சூர்யா ரசிகர்கள். என்.ஜி.கே. அப்டேட்டை எதிர்பார்த்து எதிர்பார்த்து சோர்ந்து போன ரசிகர்களுக்கு காப்பான் சிறந்த புத்தாண்டு ட்ரீட்டாக அமைந்துள்ளது.
தல ரசிகர்கள்
காப்பான் குழுவுக்கும், சூர்யா ரசிகர்களுக்கும் தல ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











