சூர்யா தான் என்னோட க்ரஷ்.. நடிகை சாய்பல்லவி பளீச் !

சென்னை: நடிகை சாய்பல்லவி தெலுங்கில் வித்தியாசமான கதைகளில் நடித்து இப்பொழுது முன்னணி கதாநாயகியாக உள்ளார்

தமிழில் மாரி 2, என்ஜிகே உள்ளிட்ட படங்களை தொடர்ந்து இப்பொழுது சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார் அந்த படத்தை கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கிறது

இந்த நிலையில் தனியார் யூடியூப் சேனல் நேர்காணலில் பேசிய சாய்பல்லவி சூர்யாதான் என்னோட முதல் க்ரஷ் என வெளிப்படையாக கூறியுள்ளார்.

அபாரமான நடனத் திறமை

அபாரமான நடனத் திறமை

மிகச் சிறந்த நடிப்புத் திறமை அபாரமான நடனத் திறமை என தென்னிந்தியாவின் முன்னணி கதாநாயகியாக கலக்கியவர் நடிகை சாய் பல்லவி மலையாளத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான பிரேமம் படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் அறிமுகம் ஆனார். முதல் படத்திலேயே எக்கச்சக்கமான ரசிகர்கள் பட்டாளம் உருவானது இவருக்கு. பிரேமம் திரைப்படம் மலையாள மொழியில் வெளியாகி இருந்தாலும் தமிழில் இந்த படத்திற்கு ரசிகர்கள் மிகப்பெரிய வரவேற்பு அளித்தனர். பிரேமம் வெற்றிக்குப் பிறகு பலரும் சாய்பல்லவியை மலர் டீச்சர் எனவே செல்லமாக அழைத்து வந்தனர்.

தேவதாசியாக

தேவதாசியாக

தெலுங்கில் சாய் பல்லவி அறிமுகமானார் பிடா மிகப்பெரிய வெற்றி பெற்றதால் இப்பொழுது தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக உள்ளார். இவர்கள் மத்தியில் சாய்பல்லவி மிகப்பெரிய வரவேற்பு இருக்கிறது. முன்னணி ஹீரோவாக இருந்தாலும் நல்ல கதையாக இருந்தால் மட்டுமே நடிக்க ஒப்பந்தமானவர் ஓம் சாய் பல்லவி நானியின் நடிப்பில் வெளியான ஷியா சிங்கா ராய் படத்தில் தேவதாசியாக நடித்து அசத்தியிருப்பார். இப்பொழுது ராணாவுடன் இணைந்து விராட பருவம் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

ரவுடி பேபி

ரவுடி பேபி

தமிழில் வெளியான மாரி 2 படத்தில் நடித்து தமிழில் ஹீரோயினாக அறிமுகமான சாய்பல்லவி இந்த படத்தில் ரவுடி பேபி பாடலுக்கு தனுஷுக்கு இணையாக ஆட்டம் போட்டு இணையதளத்தை அதிர வைத்தார். அதை தொடர்ந்து சூர்யாவுக்கு ஜோடியாக என்ஜிகே என்ற படத்திலும் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுக்களைப் பெற்றார். சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ள அந்த படத்தை கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கிறது.

சூர்யா தான் என்னோட க்ரஷ்

சூர்யா தான் என்னோட க்ரஷ்

இந்த நிலையில் தனியார் யூடியூப் சேனல் நேர்காணலில் பேசிய சாய் பல்லவி என்னுடைய முதல் க்ரஷ் நடிகர் சூர்யா தான். சூர்யாவை எனக்கு சின்ன வயதில் இருந்தே ரொம்பவும் பிடிக்கும் என வெளிப்படையாக கூறியிருந்தார். சாய்பல்லவி சூர்யாவுடன் என் ஜி கே படத்தில் இணைந்து நடித்திருந்தார். செல்வராகவன் இயக்கத்தில் மிக வித்தியாசமான அரசியல் கதைக்களத்தில் வெளியான இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதது. மீண்டும் சூர்யா சாய்பல்லவி இணைந்து நடிப்பார்கள் என ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X