சூர்யாவின் அடுத்த பவர்ஃபுல் கேமியோ ரோல்..ஷங்கரின் RC15 அப்டேட்!

சென்னை : பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில் உருவாகி வரும் ராம்சரணின் RC15 படத்தில் கேமியோ ரோலில் சூர்யா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ராம்சரணுக்கு ஜோடியாக நடிகை கியாரா அத்வானி நடித்துள்ளார். அரவிந்த் சாமி, எஸ்.ஜே.சூர்யா, ஸ்ரீகாந்த், அஞ்சலி, ஜெயராம், நவீன் சந்திரா உட்பட பலர் நடிக்கின்றனர்.

தெலுங்கு பட உலகின் மிகப்பெரிய தயாரிப்பாளர்களில் ஒருவரான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷனின் தில் ராஜூ தயாரிக்கிறார். பிரபல ஒளிப்பதிவாளர் திருநாவுக்கரசு ISC இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

ராம்சரண்

ராம்சரண்

எஸ்.எஸ் ராஜமௌலி இயக்கிய ஆர்.ஆர்.ஆர் படத்தில் ஜூனியர் என்டிஆர், ராம்சரண் ஆகியோர் நடித்திருந்தனர். மிகப்பெரிய வசூலை வாரிக்குவித்த ஆர்ஆர்ஆர் படத்திற்கு பிறகு ராம்சரண் ஷங்கர் இயக்கும் பான் இந்தியா படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கு நடிகர்களின் மார்க்கெட் நாளுக்கு நாள் உயர்ந்த வண்ணம் உள்ளது. காரணம், அவர்கள் நடிக்கும் படங்கள் தற்போது இந்திய அளவில் பான் இந்திய படங்களாக வெளியிடப்படுகின்றன.

RC15

RC15

ராம்சரணின் 15 திரைப்படமான இப்படத்திற்கு தற்காலிகமாக RC15 என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் ராம் சரண் இரட்டை வேடங்களில் நடித்து வருவதாகக் கூறப்படும் நிலையில், இப்படத்தில் ராம் சரண் ஐஏஎஸ் அதிகாரியாக நடித்திருப்பதாகவும். நடுத்தர வயது முதல் வயதானவர் வரை பல கெட்டப்புகளில் ராம்சரண் நடித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

கேமியோ ரோலில்

கேமியோ ரோலில்

இந்நிலையில், இத்திரைப்படத்தில் சூர்யா கேமியோ ரோலில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. விக்ரம் படத்தில் கடைசி ஐந்து நிமிடத்தில் சூர்யா நடித்த ரோலக்ஸ் கதாபாத்திரம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்ற நிலையில், RC 15 படத்தில் மற்றுமொரு பவர்புல் ரோலில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. இந்த தகவலால் சூர்யாவின் இந்த படத்தை எதிர்பார்த்துள்ளனர்.

பிரம்மாண்ட சண்டை காட்சி

பிரம்மாண்ட சண்டை காட்சி

மேலும், மாநாடு படத்தின் மூலம் அனைவரின் கவனத்தை ஈர்த்த எஸ்.ஜே சூர்யாவிடம் வில்லன் கதாபாத்திரம் குறித்து பேசியிருப்பதாகவும் அதற்கு அவர் ஓகே சொன்னதாகவும் கோலிவுட் சினிமா வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகி உள்ளன. படத்தில் 60% படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும் எஞ்சிய படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. அண்மையில் 1000 பேருடன் ராம்சரண், கியாரா நடனமாட ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட்டதாகவும். ஒரு பிரம்மாண்ட சண்டைக் காட்சியைப் படமாக்க உள்ளார்களாம். அந்த சண்டைக்காட்சிக்கு மட்டும் 1200 ஸ்டன்ட் நடிகர்களை நடிக்க வைக்கப் போவதாக கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X