Suriya: சென்னை கிரிக்கெட் அணியின் ஓனரான சூர்யா.. தயாரிப்பை தாண்டி இந்த பிசினஸும் ஸ்டார்ட்!

சென்னை: பாலிவுட் நடிகர்களான ஷாருக்கான், ப்ரீத்தி ஜிந்தா உள்ளிட்ட நடிகர்கள் ஐபிஎல் அணிகளையே வாங்கி பல ஆண்டுகளாக கிரிக்கெட்டில் ஆர்வம் செலுத்தி வரும் நிலையில், நடிகர் சூர்யா தற்போது அதே ரூட்டில் தனது பயணத்தை தொடங்க முடிவு செய்து சென்னை கிரிக்கெட் அணியை வாங்கி உள்ளதாக ட்வீட் போட்டு தனது சந்தோஷத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

நடிப்பை தாண்டி நடிகர் சூர்யா தயாரிப்பு பணிகளிலும் ஈடுபட்டு வரும் நிலையில், அடுத்ததாக தனது ஆர்வத்தை விளையாட்டுத் துறையிலும் செலுத்த முயற்சி செய்து வருகிறார். அதன் விளைவாக தற்போது ISPLT10 போட்டியில் சென்னை அணியை வாங்கி உள்ளதாக தெரிவித்துள்ளார்.

Suriya is the proud owner for Chennai team in ISPLT10

பாக்ஸ் ஆபிஸில் ஏமாற்றம்: கொரோனா ஆரம்பித்ததில் இருந்தே நடிகர் சூர்யா பாக்ஸ் ஆபிஸில் எந்தவொரு சாதனையையும் படைக்க முடியாமல் தவித்து வருகிறார். சூரரைப் போற்று மற்றும் ஜெய்பீம் என இரு நல்ல படங்களையும் ஓடிடியில் நேரடியாக வெளியிட்ட நிலையில், பாக்ஸ் ஆபிஸில் பல ஆண்டுகளாக அவருக்கு எந்தவொரு இடமும் கிடைக்கவில்லை. கடைசியாக கடந்த ஆண்டு ஆரம்பத்தில் வெளியான எதற்கும் துணிந்தவன் படம் தியேட்டரில் வெளியானாலும் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான அந்த படம் சொதப்பிய நிலையில், கங்குவா படத்தை தான் பெரிதும் நம்பி வருகிறார்.

சம்மருக்கு கங்குவா: இந்த ஆண்டு சூர்யாவின் கங்குவா அல்லது வணங்கான் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வணங்கான் படத்தில் இருந்து சூர்யா அதிரடியாக வெளியேறி விட்டார். அந்த படத்தில் அருண் விஜய் நடித்து வருகிறார். சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் கங்குவா படத்தில் திஷா பதானி, பாபி தியோல் உள்ளிட்ட நடிகர்கள் நடித்து வருகின்றனர். அடுத்த ஆண்டு சம்மருக்கு கங்குவா சம்பவம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கலக்கும் ஜோதிகா: இந்த ஆண்டு சூர்யாவுக்கு படம் இல்லை என்றாலும் அவரது மனைவி ஜோதிகா நடிப்பில் வெளியான காதல் தி கோர் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை கேரளாவில் பெற்றுள்ளது. மம்மூட்டியுடன் ஜோடி போட்டு ஓரினச்சேர்க்கை தொடர்பான போல்டான கதையில் ஜோ பேபி இயக்கத்தில் ஜோதிகா நடித்திருந்தார்.

மும்பையில் வீடு: அப்பா சிவகுமார் மற்றும் தம்பி கார்த்தி உடன் சென்னையில் உள்ள தி. நகரில் சூர்யா மற்றும் ஜோதிகா வாழ்ந்து வந்த நிலையில், கடந்த ஆண்டு திடீரென மும்பைக்கு சென்று செட்டில் ஆகி விட்டனர். இந்தியில் ஜோதிகா நடித்து வருவதால் அங்கே சென்று விட்டார் எனக் கூறப்பட்ட நிலையில், அப்பா, அம்மாவை பார்த்துக் கொள்ளவே அங்கே சென்றேன் என ஜோதிகா சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.

கிரிக்கெட் அணியின் ஓனரான சூர்யா: ஏற்கனவே தியா தேவ் என குழந்தைகளின் பெயரில் 2டி நிறுவனத்தை ஆரம்பித்து சூர்யா மற்றும் ஜோதிகா நடத்தி வருகின்றனர். கல்விக்காக அகரம் ஃபவுண்டேஷன் நடத்தி வரும் சூர்யா தற்போது விளையாட்டிலும் தனது ஆர்வத்தை செலுத்தி வருகிறார். செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் போட்டியில் விளையாடி வந்த சூர்யா தற்போது ஸ்ட்ரீட் கிரிக்கெட் ப்ரீமியர் லீக் டி 10 போட்டி விளையாட்டில் சென்னை அணியின் ஓனராக தான் மாறியிருப்பதை மகிழ்ச்சியோடு அறிவித்துள்ளார். விரைவில் டி10 போட்டிகள் தொடங்க உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X