மிஸ்ஸான விஜய் பட வாய்ப்பு.. அடுத்து சூர்யாவை இயக்கப் போகிறாரா ஆர்ஜே பாலாஜி.. அப்போ வாடிவாசல்?

சென்னை: இயக்குநர் வெற்றிமாறன் உடன் இணைந்து சூர்யா வாடிவாசல் படத்தை அடுத்து ஆரம்பிப்பார் என ரசிகர்கள் பல ஆண்டுகளாக காத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், அடுத்தடுத்து சூர்யாவின் மற்ற பட அப்டேட்கள் தான் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், யாரும் எதிர்பார்க்காத ஒரு புதிய கூட்டணிக்கான அப்டேட்கள் கசிந்துள்ளன.

பாலாவுடன் இணைந்து வணங்கான் படத்தை ஆரம்பித்த சூர்யா அந்த படம் தனக்கு செட்டாகாது என ஒரு கட்டத்துக்கு மேல் நினைத்து அதிலிருந்து விலகினார். அதன் பின்னர் சுதா கொங்கராவுடன் இனைந்து புறநானூறு படத்தில் நடிக்கப் போவதாக அறிவிப்பு வெளியானது. ஆனால், அந்த படமும் அப்படியே டிராப் ஆகி விட்டது.

suriya rj balaji suriya 45

கங்குவா படத்தை முடித்த கையோடு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா 44 படத்தில் நடித்து வரும் சூர்யா வரும் பொங்கலுக்கு அஜித்தின் குட் பேட் அக்லி படத்துடன் போட்டியாக அந்த படத்தை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா: விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்த தானா சேர்ந்த கூட்டம் படத்தில் காமெடியனாக ஆர்ஜே பாலாஜி நடித்திருப்பார். ஆனால், தற்போது சூர்யாவின் 45வது படத்தை இயக்கப் போவதே ஆர்ஜே பாலாஜி தான் என்கிற சூடான அப்டேட் சோஷியல் மீடியாவில் தீயாக பரவி வருகிறது. ட்ரீம் வாரியர் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. விரைவில் இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.

மிஸ்ஸான தளபதி 69: எச். வினோத் இயக்கத்தில் விஜய்யின் கடைசி படமான தளபதி 69 படத்தை இயக்கும் வாய்ப்பு ஆர்ஜே பாலாஜியிடம் தான் முன்னதாக வந்தது. ஆனால், அவர் உருவாக்கிய கதை விஜய்க்கு ஏனோ செட்டாகவில்லை என்பதால் அந்த படம் மிஸ்ஸானது. இந்நிலையில், சூர்யாவை வைத்து ஆர்ஜே பாலாஜி படம் இயக்கப் போகிறார் என்றதுமே விஜய்க்கு ரெடி பண்ண கதையில் சூர்யா நடிக்கப் போகிறாரா என்கிற கேள்விகள் தான் எழுந்துள்ளன.

மாசாணி அம்மன் என்னாச்சு?: ஆர்ஜே பாலாஜி மூக்குத்தி அம்மன் 2ம் பாகத்தை இயக்காமல் சுந்தர். சி இயக்கத்தில் நயன்தாரா நடிக்க மூக்குத்தி அம்மன் 2 படம் உருவாக உள்ளது. த்ரிஷாவை வைத்து மாசாணி அம்மன் படம் உருவாகும் என தகவல்கள் வெளியான நிலையில், அந்த படம் அப்போ என்ன ஆகும் என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன. முதலில் ஆர்ஜே பாலாஜி சூர்யா படத்தை தான் கையிலெடுப்பார் என்றும் கூறுகின்றனர்.

வாடிவாசல் எப்போ?: சூர்யா 44 படம் முடிந்த கையோடு அதிரடியாக சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தான் நடிக்கப் போகிறார் என்றும் அதன் பின்னர் தான் வாடிவாசல் படத்தின் பக்கம் செல்வார் என்றும் கூறுகின்றனர். அடுத்த ஆண்டு தீபாவளிக்கு தளபதி 69 படத்துடன் போட்டியாக சூர்யா 45 படம் வெளியாகுமா? அல்லது அதற்கு முன்னதாக வெளியாகுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். பெரிய நடிகர்களுடன் சூர்யா போட்டியை தவிர்த்து வரும் நிலையில், குட் பேட் அக்லி படத்துடன் கூட சூர்யா 44 படம் போட்டியிடாது என்றே சினிமா வட்டாரத்தில் கணிப்புகள் நிலவுகின்றன. கங்குவா படம் நவம்பர் 14ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், அந்த படத்தின் வெற்றி சூர்யாவுக்கு மிகப்பெரிய பலமாக அமையும் என எதிர்பார்க்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X