வசந்தபாலன் கதையை கேட்டு இம்ப்ரஸான சூர்யா.. அடுத்த படம் அவர் கூட தானாம்!

சென்னை: நடிகர் சூர்யா அடுத்து இயக்குநர் வசந்தபாலனின் படத்தில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களில் ஒருவர் சூர்யா. சினிமா மட்டுமின்றி அகரம் ஃபவுண்டேஷன் என்ற அறக்கட்டளையையும் நடத்தி ஏழை மாணவ மாணவிகள் கல்வி பெற உதவி வருகிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சூர்யா, பின்னர் தீவிர சிகிச்சைக்கு பின்பு வீடு திரும்பினார்.

சூர்யாவின் அடுத்தப்படம்

சூர்யாவின் அடுத்தப்படம்

தற்போது கொரோனாவில் இருந்து முழுமையாக குணமடைந்துள்ள நடிகர் சூர்யா, பாண்டிராஜ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். குடும்ப சப்ஜெக்ட்டாக இந்த கதை உருவாகி வருகிறது. இந்நிலையில் சூர்யாவின் அடுத்தப்படம் குறித்த தகவல் தீயாய் பரவி வருகிறது.

பீரியாடிக் ஸ்டோரி

பீரியாடிக் ஸ்டோரி

அதாவது நடிகர் சூர்யா வசந்தபாலனின் கதையை கேட்டு இம்ப்ரஸ் ஆகியுள்ளாதாக தெரிகிறது. அண்மையில் நடிகர் சூர்யாவை நேரில் சந்தித்த இயக்குநர் வசந்தபாலன், ஒரு பீரியாடிக் ஸ்டோரியை சூர்யாவிடம் கூறியுள்ளார்.

உறுதியளித்த சூர்யா

உறுதியளித்த சூர்யா

அந்த வரலாற்றுக் கதையை கேட்டு இம்ப்ரஸ் ஆகிவிட்டாராம் சூர்யா. இதனால் அந்தப் படத்தில் வசந்தபாலனுடன் கைக்கோர்க்க சூர்யா உறுதி அளித்ததாகவும் தெரிகிறது. சூர்யா ஏராளமான சேலஞ்சிங் கேரக்டர்களில் நடித்துள்ளார்.

வெற்றிமாறனுடன் வாடிவாசல்

வெற்றிமாறனுடன் வாடிவாசல்

ஆனால் இதுவரை அவர் பெரிதாக எந்த வரலாற்று படத்திலும் நடிக்கவில்லை. பலமுறை வரலாற்று படங்களில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அந்த படங்கள் எடுக்கப்படவில்லை. சூர்யா பாண்டிராஜ் இயக்கத்தில் நடிப்பதை தாண்டி, வெற்றிமாறனின் வாடிவாசல் படத்திலும் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

நிறுத்தப்பட்டதா? தொடருமா?

நிறுத்தப்பட்டதா? தொடருமா?

அடுத்து வாடி வாசல் படத்தில் தான் சூர்யா நடிக்கவுள்ளார் என கூறப்படுகிறது. மேலும் ஹரியின் அருவா படத்திலும் ஒப்பந்தமானார் சூர்யா. ஆனால் அந்தப் படம் நிறுத்தப்பட்டதா அல்லது தொடருமா என்பது தெளிவாக தெரியவில்லை.

அர்ஜூன் தாஸ்

அர்ஜூன் தாஸ்

இதனிடையே இயக்குநர் வசந்தபாலனும் ஜிவி பிரகாஷ் நடித்த ஜெயில் படத்தை ரிலீஸ் செய்யும் பணியில் இறங்கியுள்ளார். மேலும் அடுத்து அர்ஜூன் தாஸை வைத்து அவர் படத்தை இயக்கவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X