ஜோதிகாவுடன் ஓட்டு போட வந்த சூர்யா.. Dress Code பார்த்தீங்களா? மக்கள் யோசிக்கனும் சூர்யா வேண்டுகோள்!

சென்னை: நடிகர் சூர்யா மற்றும் அவரது மனைவியும் நடிகையுமான ஜோதிகா என இருவரும் ஒன்றாக வாக்கு செலுத்த வந்தனர். இருவரும் வாக்கு செலுத்திய பின்னர் புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தனர். சூர்யா கருப்பு நிற டீசர்ட் அணிந்து வந்தார். அதேபோல் அவரது மனைவியும் நடிகையுமான ஜோதிகா வெளிர் காக்கி நிறத்தில் ஆடை அணிந்து வந்தார். வாக்களித்த பின்னர் சூர்யா செய்தியாளர்களிடம் பேசுகையில், “ மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும், வாக்களிப்பதற்கு முன்னர் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்ற ஆய்வை மக்கள் மேற்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். இவரது இந்த கருத்து தற்போது சூர்யாவின் ரசிகர்கள் மத்தியில் பரவலாக பரவி வருகிறது.

அதேபோல் ஏற்கனவே இணையத்தில் சூர்யா ரசிகர்கள் விஜய்க்கும் அவரது கட்சியான தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்களுக்கும் வாக்களிக்க மாட்டோம் என்று இணையத்தில் டிரெண்ட் செய்து வந்தனர். இப்படி இருக்கையில் சினிமா பிரபலங்கள் பலரும் தவெகவுக்கு ஆதரவாக வாக்களிக்கின்றனர் என்பதை காட்ட விஜய் பிரசாரத்தில் வெள்ளை நிறச் சட்டையும் வெளிர் காக்கி நிற பேண்ட் அணிந்து பிரசாரம் செய்ததைப் போல, அவருக்கு ஆதரவான பிரபலங்களும் அதே போல் உடைகள் அணிந்து வந்தனர். இந்நிலையில் நடிகர் சூர்யா கருப்பு நிற டீசர்ட் அணிந்து வந்தது பேசு பொருளாக மாறி உள்ளது. அதேபோல் நடிகர் தனுஷ் கருப்பு நிற ஆடை அணிந்து வந்திருந்தார்.

Suriya amp amp Jyothika Cast Their Vote Together Suriya s Statement Sparks Buzz

அதேபோல், சூர்யாவின் அப்பாவும் நடிகருமான சிவக்குமார் தனது வாக்கினைச் செலுத்திய பின்னர், " யார் ஆட்சிக்கு வந்தாலும் டாஸ்மாக் கடைகளை உடனே மூட வேண்டும். குடிமக்களை குடிகார மக்கள் ஆக்கியது போதும், தன் குடும்பத்தோடு சேர்ந்து கோடி கோடியாக சொத்துக்களை குவிக்காமல், கடை கோடி மனிதனின் வாழ்க்கையில் ஒளியேற்ற வேண்டும், யார் ஆட்சிக்கு வந்தாலும் அவர்களிடத்தில் நான் வைக்கும் கோரிக்கை இதுதான். மதுபான கடைகளை கலைஞர் கருணாநிதி தொடங்கியதில் அன்னையிலிருந்து நான் அதற்கு எதிரானவன். இதை செய்வார்களா என்று எனக்கு தெரியாது. ஆனால், செய்தால் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்" என்று செய்தியாளர்களிடம் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X