இன்று 7வது திருமண நாளை கொண்டாடும் சூர்யா-ஜோதிகா
சென்னை: சூர்யா-ஜோதிகா தம்பதி இன்று தங்களது 7வது திருமண நாளை கொண்டாடுகின்றனர்.
சூர்யாவும், ஜோதிகாவும் ஒன்றாக சேர்ந்து பல படங்களில் நடித்துள்ளனர். அவ்வாறு நடிக்கையில் அவர்களுக்குள் காதல் ஏற்பட்டது. அவர்கள் பல ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த 2006ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ம் தேதி பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.

2 குழந்தைகள்
சூர்யா, ஜோதிகா தம்பதிக்கு தியா என்ற மகளும், தேவ் என்ற மகனும் உள்ளனர். மகள் தியாவை சூர்யா பைக்கில் பள்ளிக்கு அழைத்துச் செல்வதாக செய்திகள் வந்தன.

நடிப்பை விட்ட ஜோ
ஜோதிகா திருமணம், குழந்தைகள் என்று ஆன பிறகு நடிப்பை விட்டு விட்டு வீட்டில் இருந்துவிட்டார்.

7வது திருமண நாள்
சூர்யா, ஜோதிகா இன்று தங்களின் 7வது திருமண நாளை கொண்டாடுகின்றனர். அவர்களுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

மீண்டும் நடிப்பு
குழந்தைகள் ஓரளவுக்கு வளர்ந்துவிட்டதால் மீண்டும் நடிக்கலாம் என்று ஜோதிகா யோசனையில் உள்ளாராம். நல்ல கதாபாத்திரங்கள் கிடைத்தால் ஜோதிகாவை விரைவில் வெள்ளித்திரையில் பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











