»   »  எப்படி சொல்வது என்றே தெரியவில்லை: சூர்யா, ஜோதிகாவால் திக்குமுக்காடிய நிவின் பாலி

எப்படி சொல்வது என்றே தெரியவில்லை: சூர்யா, ஜோதிகாவால் திக்குமுக்காடிய நிவின் பாலி

Posted By:
Subscribe to Oneindia Tamil
சூர்யா, ஜோதிகாவால் திக்குமுக்காடிய நிவின் பாலி- வீடியோ

கொச்சி: நிவின் பாலியின் காயம்குளம் கொச்சுண்ணி செட்டுக்கு விசிட் அடித்து அவர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளனர் சூர்யாவும், ஜோதிகாவும்.

உண்மை கதையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டு வரும் மலையாள படம் காயம்குளம் கொச்சுண்ணி. இந்த படத்தில் நிவின் பாலி, அமலா பால் உள்ளிட்டோர் நடித்து வருகிறார்கள்.

நிவின் பாலி படத்தை ஜோதிகாவின் 36 வயதினிலே படத்தை எடுத்த ரோஷன் ஆன்ட்ரூஸ் இயக்கி வருகிறார்.

ஜோதிகா

ஜோதிகா

சூர்யா, ஜோதிகா காயம்குளம் கொச்சுண்ணி செட்டுக்கு சென்றனர். அவர்களை வரவேற்று படக்குழு கேக் வாங்கி அவர்களை வெட்ட வைத்து மகிழ்ந்தது.

நிவின்

நிவின்

காயம்குளம் கொச்சுண்ணி படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை ஜோதிகாவும், சூர்யாவும் சேர்ந்து வெளியிட்டனர். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் கொச்சுண்ணி நிவின் பாலி மிரட்டலாக உள்ளார்.

சூர்யா

பிசியான நேரத்திலும் நேரில் வந்து கொச்சுண்ணி ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட சூர்யா சார், ஜோதிகா மேடத்திற்கு மொத்த படக்குழுவும் நன்றி தெரிவித்துக் கொள்வதாக நிவின் பாலி ஃபேஸ்புக்கில் போஸ்ட் போட்டுள்ளார்.

ரிலீஸ்

ரிலீஸ்

நிவின் பாலி நடித்துள்ள நேரடி தமிழ் படமான ரிச்சி வரும் டிசம்பர் மாதம் 8ம் தேதி ரிலீஸ் ஆகிறது. முதல் நேரடி தமிழ் படம் ரிலீஸாகும் மகிழ்ச்சியில் உள்ளார் நிவின் பாலி.

English summary
Actor Nivin Pauly posted on his FB page saying that, 'Thank you Surya Sir and Jyothika ma'am for this gesture..I can’t explain in words how all of us felt... From the bottom of our hearts, the entire team of Kayamkulam Kochunni is so grateful that you took the time off your schedules to come and visit us and launch the first look of Kochunni....Nanri! ♥️♥️♥️♥️♥️'

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil