சூர்யா – ஜோதிகாவின் மகள் தெலுங்கு பட ஹீரோயின் ஆனார்

By Mayura Akilan

சென்னை: 'சில்லுனு ஒரு காதல்' படத்தில் சூர்யா - ஜோதிகாவின் மகளாக நடித்த குழந்தை நட்சத்திரம் ஷ்ரியா ஷர்மா இப்போது குமரியாக வளர்ந்து தெலுங்கு படமொன்றில் கதாநாயகியாக நடிக்கிறார்.

செப்டம்பர் 1997ல், குளுகுளு இமாச்சலப் பிரதேசத்தில் பிறந்த ஷ்ரியா, ரஷ்னா, சன்பீஸ்ட், சென்னை சில்க்ஸ், காம்ப்ளான் என பல விளம்பரங்களில் நடித்துள்ளார்

ஷாருக்கான், சிரஞ்சீவி, மகேஷ்பாபு என்று அனைத்திந்திய ஸ்டார்களுடன் குழந்தை நட்சத்திரமாய் நடித்துள்ளார் ஷ்ரியா.

ஷாருக்கான் கடிதம்

ஷாருக்கான் கடிதம்

'My Princess, will miss your smile.' என்று பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாரூக்கான் அனுப்பிய கடிதத்தை இன்றும் பத்திரமாகப் பாதுகாத்து வருவதாகச் சொல்கிறார் ஷ்ரியா.

சில்லுன்னு ஒரு காதல்

சில்லுன்னு ஒரு காதல்

2006ல் சூர்யா-ஜோதிகா நடித்த ‘சில்லுனு ஒரு காதல்' படத்தில், சூர்யா, ஜோதிகாவுக்கு மகளாக நடித்துள்ளார் ஷ்ரியா ஷர்மா. அப்போது ஷ்ரியாவுக்கு வயது 9.

எந்திரன் படத்தில்

எந்திரன் படத்தில்

சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த எந்திரனில் நடித்தபோது அவருக்கு வயது 13.

தெலுங்கில் ஹீரோயின்

தெலுங்கில் ஹீரோயின்

இப்போது 17 வயது வயதில் பருவமங்கையாய் இருக்கும் ஷ்ரியா தெலுங்கில் ‘காயக்கடு' என்னும் படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகி இருக்கிறார் ஷ்ரியா.

தமிழுக்கு எப்போ?

தமிழுக்கு எப்போ?

விளம்பரங்களின் மூலம் குட்டி தேவதையாய் மனம் கவர்ந்த ஷ்ரியா தமிழ் கூறும் நல் உலகிற்கு எப்போது வருவார் என்று பார்த்துக்கொண்டிருக்கின்றனர் ரசிக மகாஜனங்கள்.

தேசிய விருது

தேசிய விருது

2004ஆம் ஆண்டு டிவி சீரியலில் நடித்த போதே சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருது பெற்றுள்ளார் ஷ்ரியா. 2012 ஆம் ஆண்டு 59 வது தேசிய திரைப்பட விருது விழாவில் சில்லர் பார்ட்டி திரைப்படத்திற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருது பெற்ற ஷ்ரியா ஷர்மா, தற்போது கதாநாயகியாக நடிக்கிறார். இவர் தனது சிறந்த கதாநாயகி விருது பெறுவாரா? பொருத்திருந்து பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X