நயன்தாரா திருமணத்தில் சூர்யா - ஜோதிகா எப்படி இருக்காங்கன்னு பாருங்க.. மனைவியுடன் வந்த விஜய்சேதுபதி!

சென்னை: நயன்தாரா திருமணம் கடந்த மாதம் 9ம் தேதி நடைபெற்ற நிலையில், மாப்பிள்ளை விக்னேஷ் சிவன் மற்றும் மணப்பெண் நயன்தாரா திருமண புகைப்படங்கள், திருப்பதியில் அவர்கள் நடத்திய போட்டோஷுட் மற்றும் ஹனிமூன் புகைப்படங்கள் மட்டுமே வெளியாகின.

Recommended Video

Nayanthara Marriage-க்கு Cute-ஆ வந்து வாழ்த்திய Surya, Jyothika

நயன்தாராவின் திருமண வீடியோ கெளதம் மேனனால் படமாக்கப்பட்டு நெட்பிளிக்ஸுக்கு விற்கப்பட்டு விட்டதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், திருமணம் முடிந்து ஒரு மாதம் ஆன நிலையில், ஜூலை 9ம் தேதி நயன்தாரா திருமணத்தில் கலந்து கொண்ட பிரபலங்களின் புகைப்படங்களை இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.

ரஜினி முதல் ஜெயம் ரவி வரை

ரஜினி முதல் ஜெயம் ரவி வரை

நடிகர் ரஜினிகாந்த், ஷாருக்கான், கார்த்தி, ஜெயம் ரவி, விஜய்சேதுபதி உள்ளிட்ட நடிகர்கள் திருமணத்தில் குடும்பத்துடன் கலந்து கொண்டதாக தகவல்கள் வெளியான நிலையில், தற்போது நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனை அவர்கள் வாழ்த்தும் அட்டகாசமான புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது. இந்நிலையில், நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா கலந்து கொண்ட புகைப்படங்களும் தற்போது வெளியாகி உள்ளன.

சூர்யா - ஜோதிகா

சூர்யா - ஜோதிகா

நயன்தாரா திருமணத்தில் நடிகர் கார்த்தி தனது மனைவியுடன் கலந்து கொண்ட புகைப்படங்கள் அப்போதே கசிந்து விட்டன. ஆனால், நடிகர் சூர்யா காரில் செல்லும் ஒரு வீடியோ மட்டுமே வெளியாகி டிரெண்டானது. சூர்யா கலந்து கொள்ளவில்லை என்கிற பேச்சுக்களும் கிளம்பின. இந்நிலையில், கஜினி, ஆதவன், மாஸ் என்கிற மாசிலாமணி உள்ளிட்ட படங்களில் நயன்தாராவுடன் இணைந்து நடித்த சூர்யா தனது மனைவி ஜோதிகாவுடன் கலந்து கொண்ட செம க்யூட்டான புகைப்படத்தை தற்போது இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தானா சேர்ந்த கூட்டம் படத்திலும் சூர்யா நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மனைவியுடன் விஜய்சேதுபதி

மனைவியுடன் விஜய்சேதுபதி

சூர்யா மற்றும் ஜோதிகா தங்களது திருமணத்தில் கலந்து கொண்டு வாழ்த்திய புகைப்படம் மற்றும் நடிகர் விஜய்சேதுபதி மற்றும் அவரது மனைவி ஜெஸ்ஸி திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திய புகைப்படத்தையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார் விக்னேஷ் சிவன். நானும் ரவுடி தான், காத்துவாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட படங்களில் நயன் மற்றும் விக்கியுடன் இணைந்து பணியாற்றி உள்ளார் விஜய்சேதுபதி என்பது உலகறிந்த விஷயம்.

குவியும் லைக்ஸ்

குவியும் லைக்ஸ்

நயன்தாராவின் திருமண புகைப்படங்களை திடீரென இயக்குநர் விக்னேஷ் சிவன் வெளியிட ஆரம்பித்த நிலையில், வேறலெவலில் லைக்குகள் குவிந்து வருகின்றன. நயன்தாரா ஹாஷ்டேக்கும் டிரெண்டாகி வருகின்றன. ரஜினிகாந்த், ஷாருக்கான், மணிரத்னம், சூர்யா, ஜோதிகா, விஜய்சேதுபதி உள்ளிட்ட பிரபலங்கள் புன்னகையுடன் மணமக்களை வாழ்த்தும் புகைப்படங்களை ரசிகர்கள் வெகுவாக ரசித்து அதிகளவில் ஷேர் செய்து வருகின்றனர்.

அஜித் குடும்பம்

அஜித் குடும்பம்

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஏகே62 படம் உருவாக உள்ள நிலையில், நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினி மற்றும் அவரது குடும்பத்தினர் திருமணத்தில் கலந்து கொண்ட புகைப்படங்களை எப்போது வெளியிட போறீங்க விக்னேஷ் சிவன் என அஜித் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். அஜித்தின் மகள் அனோஷ்கா மற்றும் குட்டி தல ஆத்விக்கை பார்க்க ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X