Jyotika - Suriya: சூர்யாவோடு நான் சொர்க்கத்தில் இருக்கிறேன்.. ரொமான்ஸை டன் கணக்கில் இறக்கிய ஜோதிகா!

சென்னை: தமிழ் சினிமாவில் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த ஜோடி என்றால் நடிகர் சூர்யா- நடிகை ஜோதிகா தம்பதியர்களைச் சொல்லலாம். இவர்கள் இருவரும் சினிமாவில் இணைந்து நடிக்கத் தொடங்கியதில் இருந்து திருமண வாழ்க்கை, மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கை என ரசிகர்களின் பேரன்பை பெற்ற சினிமா தம்பதியர்களில் இவர்களுக்கு எப்போதும் தனி இடம் உண்டு. இந்நிலையில் ஜோதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சூர்யாவோடு செம ஜலியாக அவுட்டிங் சென்றதை வீடியோவாக பகிர்ந்துள்ளார்.

சூர்யாவும் ஜோதிகாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் என்றாலும், சினிமா பிரபலங்கள் என்ற காரணத்திற்காக அவர்களது திருமணம் அவ்வளவு எளிதாக நடந்துவிடவில்லை. இருவரும் தங்களது பெற்றோர்களை சம்மதிக்க வைக்க பெரும் போராட்டமே நடத்தினார்கள். அதன் பின்னர்தான் இவர்களுக்கு கடந்த 2006ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. காதல் வாழ்க்கையில் எந்த அளவிற்கு உறுதியாக இருந்தார்களோ அதைவிட அதிகமாகவே திருமண வாழ்க்கையில் இருக்கிறார்கள்.

சூர்யா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான கங்குவா படம் பல விமர்சனங்களை எதிர் கொண்டது. குறிப்பாக படம் லாஜிக்காக பல எதிர்மறை விமர்சனங்களை எதிர்கொண்டது. அப்படி இருக்கும்போது, சூர்யாவுக்காக களத்தில் குதித்து சூர்யாவுக்கு அரணாக நின்றார் ஜோதிகா. ரசிகர்கள் முன் வைத்த விமர்சனங்கள் சரி என ஜோதிகாவுக்கு தெரிந்தாலும், ஜோதிகா தனது கணவருக்கு பக்கபலமாக நின்றது அவரது பேரன்பின் வெளிப்பாடு.

விட்டுக் கொடுக்காத தம்பதியர்கள்: இவர்களுக்கு தியா மற்றும் தேவ் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். குழந்தைகளின் படிப்புக்காகவும், ஜோதிகா தனது பெற்றோர்களுடன் இருக்க ஆசைப்படுகிறார் என்பதற்காகவும் மொத்த குடும்பமாக மும்பையில் செட்டில் ஆகிவிட்டார்கள். ஜோதிகா பாலிவுட் படங்கள் மற்றும் வெப் சீரீஸ்களில் நடித்து வருகிறார். சூர்யாவும் பாலிவுட்டில் நடிக்க முயற்சி செய்து வருகிறார். இந்நிலையில் சூர்யாவும் ஜோதிகாவும் அவுட்டிங் சென்றுள்ளார்கள். செம ஜாலியான மற்றும் ரொமான்ட்டிக்கான அந்த அவுட்டிங் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோ துணுக்குகளை எல்லாம் இணைத்து ஒரு வீடியோவாக ஜோதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

கடற்கரையில் செம ரொமான்ஸ்: இருவரும் சீஷெல்ஸ் எனப்படும் கிழக்கு ஆப்பிரிக்க நாட்டுக்கு சுற்றுலா சென்றுள்ளார்கள். அங்கு அவர்கள் ஹெலிஹாப்ட்டரில் கடல் மேல் பயணம் செய்தது, தேங்காய் மரம் நட்டது, கடல் உணவுகளை சாப்பிட்டது, செம ஜாலியாக கடற்கரையில் இருந்தது, ரொமான்டிக்காக இருந்தது உள்ளிட்ட பல புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஒன்றாக பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது. பலரும் இந்த வீடியோவுக்கு லைக்குகளையும் கமெண்ட்களையும் வாரி வழங்கி வருகிறார்கள்.

Suriya Jyotika Went Tour to East African Country Seychelles Romantic Video Goes Trending
Photo Credit:

ரொமான்ஸ் கேப்ஷன்: இது மட்டுமல்லாமல் இந்த வீடியோவுக்கு ஜோதிகா மீண்டும் ஒருமுறை உன்னோடு சொர்க்கத்தில் என கேப்ஷனும் இட்டுள்ளார். வீடியோ எந்த அளவுக்கு ரொமான்டிக்காக உள்ளதோ, அதை விட மேலும் ரொமான்டிக்காக ஜோதிகாவின் கேப்ஷன் இருக்கிறது. சூர்யா தற்போது ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் கருப்பு படத்தில் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படம் இந்த ஆண்டே வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜோதிகாவும் பாலிவுட் படங்களில் கமிட் ஆகியுள்ளார் என கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் சுற்றுலா சென்ற சீஷெல்ஸ் தீவானது சென்னையில் இருந்து சுமார் 3500 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X