Kanguva 3rd Week Box Office: நெகடிவ் விமர்சனங்கள் காரணமா?.. ரூ. 100 கோடி கிளப்பில் இணைந்த கங்குவா!

சென்னை: கடந்த நவம்பர் 14ஆம் தேதி ரிலீஸ் ஆன கங்குவா படம் பெரும் நெகடிவ் விமர்சனங்களை எதிர்கொண்டது. குறிப்பாக படம் இரண்டு ஆண்டுகளாக உருவாக்கப்பட்டு பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸ் ஆனது. ரசிகர்கள் படம் உலகத்தரத்தில் இருக்கும் என்ற எதிர்பார்ப்போடு படத்தைப் பார்த்தனர். ஆனால் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்றும், படத்தின் திரைக்கதை மற்றும், பின்னணி இசை பெரும் விமர்சனத்திற்கு ஆளானது. இது படத்தின் வசூலை பெரும் அளவு பாதித்தது. இப்படியான நிலையில் படம் ரூபாய் 100 கோடிகள் வசூல் செய்துள்ளது. இது தொடர்பாக இந்தத் தொகுப்பில் காணலாம்.

சூர்யா, திஷா பதானி, கருணாஸ், பாபி தியோள், கார்த்தி, கோவை சரளா, நட்டி, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லீ உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் நடிப்பில் உருவான கங்குவா படத்தினை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்தது. படத்தினை சிறுத்தை சிவா இயக்கினார். படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைத்தார். படத்தில் சூர்யா மற்றும் கார்த்தி இரட்டை வேடங்களில் நடித்துள்ளனர். படத்தின் கதை சமகாலத்திலும் முன் ஜென்மத்திலும் நடப்பதைப்போல் இரண்டையும் இணைத்து காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

suriya kanguva box office kanguva collection

படம் வெளியான நாளில் இருந்து ரசிகர்கள் மத்தியில் மட்டும் இல்லாமல், விமர்சகர்கள் பொதுமக்கள் என பலரது மத்தியிலும் படம் பெரும் விமர்சனத்திற்கு ஆளானது. குறிப்பாக படத்தின் பின்னணி இசை, லாஜிக்கல் எரர், படத்தின் திரைக்கதை என பல விஷயங்கள் பெரும் கேள்விக்கு ஆளானது. இன்னும் சொல்லப்போனால் இணையம் தொடங்கி, யூடூயூப் தளங்கள் வரை படத்தின் குறைகள் தொடர்பாக தொடர்ந்து பேசப்பட்டது.

ஜோதிகா: கங்குவா படத்திற்கு நெகடிவ் விமர்சனங்கள் வந்ததால், சூர்யாவின் மனைவியும் நடிகையுமான ஜோதிகா படத்தினை திட்டமிட்டு நெகடிவ் விமர்சனங்கள் பரப்பப்படுகின்றது. மேலும் கங்குவா படத்தின் இசையில் பிரச்னை உள்ளது. அதேபோல் படத்தின் முதல் 30 நிமிடங்கள் சொதப்பல்தான், ஆனால் அதற்காக மொத்த படமும் சொதப்பல் எனக் கூறிவிடமுடியாது. மற்ற நடிகர்களின் படத்திற்கு இந்த அளவுக்கு நெகடிவ் விமர்சனங்கள் பகிரப்படுவது இல்லையே என கேள்வி எழுப்பினார்.

சூர்யா வளர்ச்சி: மேலும் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனத்தைச் சேர்ந்த தனஞ்ஜெயன், கங்குவா படத்தினை இரண்டு பெரிய நடிகர்களின் ரசிகர்களும் இரண்டு கட்சியினரும் திட்டமிட்டு காலி செய்துவிட்டனர். சூர்யாவின் வளர்ச்சி பிடிக்காமல் இவர்கள் இவ்வாறு செயல்படுகின்றனர். சூர்யா என்றோ மேடைகளில் பேசியதை மனதில் வைத்துக் கொண்டு இவ்வாறு செயல்படுகின்றனர் எனக் குறிப்பிட்டார். இவரது இந்தப் பதிவுக்கும் பெரும் எதிர்ப்பு கிளம்பியது.

வசூல்: படத்திற்கு நெகடிவ் விமர்சனங்கள் படக்குழு தரப்பில் இருந்தே தெரிவிக்கப்பட்டதால் படத்தின் வசூல் பெரும் பின்னடைவைச் சந்தித்தது. படத்தின் வசூல் இந்தியாவில் மட்டும் இல்லாமல் வெளிநாடுகளிலும் பெரும் பின்னடைவைச் சந்தித்தது. வரும் 5ஆம் தேதி புஷ்பா 2 படம் ரிலீஸ் ஆகவுள்ளதால் இந்த வாரத்துடன் கங்குவா தியேட்டரைவிட்டு வெளியேறிவிடும். அந்த வகையில் கங்குவா படம் இதுவரை அதாவது படம் வெளியாகி 18 நாளில் உலகம் முழுவதும் சேர்த்து ரூபாய் 105.3 கோடிகள் வசூல் செய்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X