Kanguva vs Amaran Day 1: கங்குவா! சிவகார்த்திகேயன் உடன் ஸ்பேரிங் போட்ட சூர்யா..வசூலிலும் அடிமேல அடி!
சென்னை: சிறுத்தை சிவா இயக்கத்தில், சூர்யா, பாபி டயாள், தீஷா பதானி, நட்டி, கருணாஸ், கலையரசி, போஸ் வெங்கட் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள படம் கங்குவா. இந்தப் படத்தினை ஞானவேல் ராஜாவின் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தின் சண்டைக் காட்சிகளை சுப்ரீம் சுந்தர் மாஸ்டர் இயக்கியுள்ளார். படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசை அமைத்துள்ளார். படம் கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக உருவாக்கப்பட்டு பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று ரிலீஸ் ஆனது. படம் முதல் நாளில் சென்னையில், சிவகார்த்திகேயனின் அமரன் படத்தின் வசூலை சமன் செய்துள்ளது.
ஏற்கனவே கூறியதைப்போல், கங்குவா படம் கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக உருவாக்கப்பட்டு, நேற்று அதாவது நவம்பர் 14ஆம் தேதி ரிலீஸ் ஆனது. படம் பார்த்த ரசிகர்கள் தொடங்கி விமர்சகர்கள் வரை பலரும் படத்தினை கடுமையாக விமர்சித்தனர். குறிப்பாக படத்தின் கதை நேர்த்தி சரியில்லை எனவும், திரைக்கதை ரசிக்கும்படியாக இல்லை எனவும், கடுமையாக விமர்சித்தனர்.

படம் தமிழ்நாட்டில் சுமார் 700 திரையரங்குகளுக்கு மேல் ரிலீஸ் ஆனது. காரணம், தீபாவளிக்கு ரிலீஸ் ஆன சிவகார்த்திகேயனின் அமரன் படம் தொடர்ந்து சிறப்பாக வசூல் குவித்து வருகின்றது. இதனால் படத்தினை ஒருவாரம் தாமதாமாக ஓடிடியில் ரிலீஸ் செய்ய நெட் ஃப்ளிக்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இப்படியான நிலையில் படத்தினை திரையரங்கில் இருந்து தூக்க திரையரங்க உரிமையாளர்கள், ஒப்புக்கொள்ளவில்லை.குறிப்பாக மல்டி ஃப்ளக்ஸ் திரையரங்க உரிமையாளர்கள் இந்த முடிவினை எடுத்தார்கள்.
ஓப்பனிங்: இதனால்தான் தமிழ்நாட்டில் சூர்யாவின் கங்குவா படத்திற்கு பெரிய ஓப்பனிங் தியேட்டர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் கிடைக்கவில்லை. அதேநேரத்தில் கங்குவா படம் முதல் நாளே கடுமையான விமர்சனங்களைச் சந்தித்ததால், படத்திற்கு இரண்டாவது நாளில் காட்சிகள் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. இது படக்குழுவினருக்கு பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் கொடுத்துள்ளது.
பில்டப்: படத்தின் புரோமோசனின்போது கங்குவா ரூபாய் 2000 கோடிகளுக்கு மேல் வசூல் செய்யும் என படத்தின் தயாரிப்பாளர் ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல் ராஜா தெரிவித்தார். குறிப்பாக படத்தின் இசை வெளியீட்டு விழாவின்போது, கங்குவா படத்தின் வெற்றி விழா சென்னை, நேரு ஸ்டேடியத்தில் கட்டாயம் நடத்தப்படும் எனவும், உலகம் முழுவதும் உள்ள கங்குவா படத்தின் விநியோகஸ்தர்களை அழைத்துவந்து வெற்றி விழா நடத்தப்படும் எனக் கூறினார். இவரது பேச்சு தொடர்ந்து ஓவர் பில்டப்பாக இருப்பதாக பலரும் தெரிவித்து வந்தனர்.
சென்னை வசூல்: இந்நிலையில் படம் முதல் நாளில் இந்தியா முழுவதும் ரூபாய் 22 கோடிகளை வசூல் செய்ததாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுமட்டும் இல்லாமல் படம் உலகம் முழுவதும் ரூபாய் 40 கோடிகளுக்கு மேல் வசூல் செய்திருக்கும் என கூறப்படுகின்றது. இப்படியான நிலையில், படம் சென்னையில் மட்டும் ரூபாய் 1.5 கோடிகளை முதல் நாளில் வசூல் செய்துள்ளது. இது தீபாவளிக்கு ரிலீஸ் ஆன சிவகார்த்திகேயனின் அமரன் படத்தின் முதல் நாள் சென்னை வசூல் ஆகும். அமரன் படமும் முதல் நாளில் சென்னையில் ரூபாய் 1.5 கோடிகளை வசூல் செய்தது. சிவகார்த்திகேயனின் அமரன் பட வசூலும் சூர்யாவின் கங்குவா பட வசூலும் ஒரே அளவுக்கு இருப்பது திரைத்துறையில் பேச்சாக மாறியுள்ளது.


Click it and Unblock the Notifications











