Kanguva: தமிழ்நாட்டு மக்கள் என்ன முட்டாள்களா? ஆத்திரமடைந்த ரசிகர்.. என்ன இந்த கிழி கிழிக்குறாரு?
சென்னை: கங்குவா படம் குறித்த பேச்சுகள் கடந்த ஒருவாரமாகவே தமிழ் சினிமா உலகில் அதிகமானது. படம் ரிலீஸ் வரை இருந்த பாசிடிவ் பேச்சுகள் அனைத்தும் படம் ரிலீஸ் ஆன பின்னர் முற்றிலும் மாறிவிட்டது. படக்குழுவினரைத் தவிர கங்குவா படத்தினை பெரிதாக யாருமே பாராட்டவில்லை. படத்தினை அண்டை மாநிலங்களில் சென்று பார்த்த சூர்யாவின் தீவிர ரசிகர்களே நொந்துபோய் முடங்கிப்போகும் அளவிற்கு படத்தின் திரைக்கதை அமைத்திருப்பது ரசிகர்களை அப்செட் ஆக்கியதாக ரசிகர்களே ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்து வருகின்றனர். இந்நிலையில் ரசிகர் ஒருவர் படம் பார்த்துவிட்டு மிகவும் காட்டமாக தனது விமர்சனத்தை வெளிப்படுத்தியுள்ளார். அது குறித்து இந்தத் தொகுப்பில் காணலாம்.
சிறுத்தை சிவா இயக்கத்தில், சூர்யா, பாபி டயாள், தீஷா பதானி, நட்டி, கருணாஸ், கலையரசி, போஸ் வெங்கட் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள படம் கங்குவா. இந்தப் படத்தினை ஞானவேல் ராஜாவின் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தின் சண்டைக் காட்சிகளை சுப்ரீம் சுந்தர் மாஸ்டர் இயக்கியுள்ளார். படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசை அமைத்துள்ளார். படம் கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக உருவாக்கப்பட்டு பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று ரிலீஸ் ஆனது.

படத்தினை அதிகாலை 4 மணிக் காட்சியும் 6 மணிக் காட்சியும் பார்க்க சூர்யாவின் தீவிரமான ரசிகர்கள் அண்டை மாநிலங்களுக்கு பயணம் செய்து படம் பார்த்தார்கள். ஆனால் படம், படக்குழுவினர் கொடுத்த பில்டப்க்கு ஏற்ற வகையில் இல்லை என ரசிகர்கள் தொடங்கி விமர்சகர்கள் வரை கருத்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக படத்தின் கதை, திரைக்கதை, வசனம், இசை என எதுவுமே ரசிகர்களுக்கு நெருக்கமானதாகவோ, அல்லது ஏற்புடையதாகவோ இல்லை. குறிப்பாக படத்தின் இசை படத்தினை பெரும் தோல்விப்படமாக மாற்றும் என ரசிகர்களே கோபமாக தெரிவித்து வருகின்றனர்.
ஆதங்கம்: இப்படியான நிலையில், படத்தினைப் பார்த்த ரசிகர் ஒருவர் மிகுந்த ஆத்திரத்துடன் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். படம் பார்த்துவிட்டு தியேட்டரில் இருந்து வெளியே வந்த ரசிகர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “ஆதங்கத்தைக் கேளுங்கள், படம் பார்க்கும் நாங்க என்ன முட்டாள்களா? ரத்தம் எல்லாம் கொதிக்கின்றது. இரண்டு படம் தீபாவளிக்குப் பார்த்தோம், அது படம். தேவி ஸ்ரீ பிரசாத் மியூசிக் அதுக்கு மேல் உள்ளது.

சூர்யா: சூர்யாவை அப்படியே பாம்பே போகச்சொல்லுங்கள். நாங்கள் எல்லாம் என்ன முட்டாள்களா? காசு கொடுத்து படம் பார்க்கின்றோம். பணம் என்ன சும்மா வருகின்றதா? விஷுவலும் இல்லை ஒரு எஃப்க்ட்டும் இல்லை. படம் தொடங்கியதில் இருந்து சூர்யா கத்திக்கொண்டே உள்ளார். நாங்க எல்லாம் என்ன மெண்ட்டலா? காமெடி என்ற பெயரில் இரண்டு பேர் இருக்கின்றார்கள், யோகி பாபு மற்றும் ரெடின் கிங்ஸ்லீ. முதல் 10 நிமிடம் இவர்கள் இருவரும் காமெடி எனும் பெயரில் கழுத்தை அறுத்தார்கள்.
ரத்தம் கொதிக்குது: விஷுவல் 3டி எஃபக்ட் எதுவுமே நல்லா இல்லை. விட்டிருந்தால் திரையைக் கிழித்துவிட்டு போயிருப்பேன். அவ்வளவு பேருக்கும் ரத்தம் கொதிக்கின்றது. படம் பார்த்த ஒருவராவது இந்தப் படத்தை நன்றாக உள்ளது எனக் கூறுவார்களா? 3டி படம் என நம்பி உள்ளே போனோன். ஒரு விஷுவலும் இல்லை, நடிகர்களின் முகமே கண்ணுக்குத் தெரியவில்லை. எவ்வளவு கோடி செலவு செய்து படம் எடுத்தாலும் படம் பார்க்கும்படியாக இருக்கவேண்டும் இல்லையா? ரத்தம் எல்லாம் கொதிக்கின்றது. தலையில் அடித்துக் கொள்ளலாம் போல் உள்ளது. இதுபோன்ற படங்களை இனிமேலாவது எடுக்க வேண்டாம் எனக் கூறுங்கள். தமிழ்நாட்டு மக்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை. படம் இன்னும் ஒரு வாரத்தில் பிச்சுக்கிட்டு வெளியே போய்விடும்" இவ்வாறு அந்த ரசிகர் மிகவும் காட்டமாக பேசியுள்ளார்.



Click it and Unblock the Notifications