Kanguva: கங்குவாவுக்கு தேதி குறிச்சாச்சு.. தெறிக்கவிட்ட ரிலீஸ் அப்டேட்.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்!
சென்னை: சூர்யாவின் நடிப்பில் தற்போது உருவாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் கங்குவா. மன்னர் காலக் கதையைக் கொண்டு எடுக்கப்பட்டு வரும் இந்த படம்தான் சூர்யாவின் நடிப்பில் அதிக பொருட்செலவில் உருவாக்கப்பட்டு வரும் படம். இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் படம் உருவாகி ரிலீஸ்க்கு தயாராக உள்ளது. படம் வரும் அக்டோபர் மாதம் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டது. அதன் பின்னர், அதே தேதியில் சூப்பர் ஸ்டாரின் வேட்டையன் ரிலீஸ் ஆவதால், கங்குவா ரிலீஸ் தேதி தள்ளிப்போவதாக சூர்யா அறிவித்தார். இந்நிலையில், கங்குவா படத்தின் ரிலீஸ் எப்போது என்பது குறித்த அப்டேட் எப்போது வெளியிடப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது.
சூர்யா தமிழ் சினிமாவிற்குள் நுழையும்போது சிவக்குமாரின் மகன் என அடையாளப்படுத்தப்பட்டார். இன்றைக்கு சூர்யாவின் அப்பா சிவக்குமார் எனக் கூறும் அளவிற்கு தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத கதாநாயகனாக மாறியுள்ளார். படங்களில் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களை மிகச் சிறிய சிறப்பாக வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காக சூர்யா எடுத்துக் கொள்ளும் மெனக்கெடல்கள் அவருடன் பணியாற்றிய பல இயக்குநர்கள் பாராட்டியுள்ளனர். உதாரணமாக நந்தா, பிதாமகன், பேரழகன், மாயாவி, ஏழாம் அறிவு, வாரணம் ஆயிரம், சூரரைப் போற்று, ஜெய் பீம் போன்ற பல படங்களை குறிப்பிடலாம். இப்படி தனது நடிப்பால் பெரும் பாராட்டுகளை குறித்து வந்தது மட்டுமல்லாமல் விருதுகளையும் பெற்று வருகிறார்.

கங்குவா: சூர்யாவின் நடிப்பில் தற்போது உருவாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் கங்குவா. மன்னர் காலக் கதையைக் கொண்டு எடுக்கப்பட்டு வரும் இந்த படம்தான் சூர்யாவின் நடிப்பில் அதிக பொருட்செலவில் உருவாக்கப்பட்டு வரும் படம். இந்த படத்தினை இயக்குநர் சிறுத்தை சிவா இயக்குகியுள்ளார். படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மட்டும் இல்லாமல், ஒட்டுமொத்த இந்திய சினிமா வட்டாரத்திலும் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
சி.ஜி பணிகள்: இந்த படம் கடந்த பொங்கலுக்கே ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படப்பிடிப்புத் தளத்தில் சூர்யாவுக்கு லேசான காயம் ஏற்பட்டதால், படப்பிடிப்பை திட்டமிட்டபடி முடிக்க முடியாமல் போனது. இதனால் படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்ற கேள்வி அனைவருக்கும் எழுந்தது. சி.ஜி பணிகளைப் பார்த்த சிலர், படத்தின் சி.ஜி வேலைகள் ஹாலிவுட் படங்களுக்கு நிகராக உருவாக்கப்பட்டுள்ளது. எனவே படம் எப்போது ரிலீஸ் செய்யப்பட்டாலும் செலவு செய்யப்பட்ட பணத்தை விடவும் பல மடங்கு அள்ளும் என கூறினர்.
அப்செட்: படம் அக்டோபர் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், அதே நாளில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வேட்டையன் ரிலீஸ் ஆகின்றது எனக் கூறியதால், கங்குவா படத்தின் ரிலீஸ் தேதியை ஒத்தி வைத்தனர். இது சூர்யா ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை உண்டாக்கியது. இதுமட்டும் இல்லாமல், பலருக்கு ரஜினிகாந்த்தின் மீது கோபத்தை ஏற்படுத்தியது. இதனால் இணையத்தில் சூர்யா ரசிகர்களுக்கும் ரஜினி ரசிகர்களுக்கும் வாக்குவாதம் முற்றியது.

அப்டேட்: இந்நிலையில், கங்குவா படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்ற அப்டேட்டை படக்குழு, நாளை காலை அதாவது செப்டம்பர் 19ஆம் தேதி காலை, 11 மணிக்கு அறிவிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. மொத்தத்தில் படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆக அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகின்றது. இதுமட்டும் இல்லாமல், ரசிகர்கள் பலரும், இந்தத் தகவலை இணையத்தில் கொண்டாடி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











