Kanguva: குழந்தைகள் தினத்தை குறிவைத்த சூர்யா.. கங்குவா பட ரிலீஸ் தேதி அறிவிப்பு.. 1000 கோடி வருமா?
சூர்யா நடிப்பில் அதிக பொருட்செலவில் உருவாக்கப்பட்டுள்ள கங்குவா படத்தினை ஸ்டூடியோ கிரீன் உருவாக்கியுள்ளது. இந்தப் படம் முதலில் அக்டோபர் 10ஆம் தேதி ரிலீஸ் ஆவதாக கூறப்பட்டது. ஆனால், அதே தேதியில் சூப்பர் ஸ்டாரின் வேட்டையன் படமும் ரிலீஸ் ஆகின்றது எனக் கூறப்பட்டதால், கங்குவா படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைகப்படுவதாக படக்குழு தெரிவித்தது. இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது. மேலும் கங்குவா படத்திற்கு படக்குழு தரப்பில் இருந்து கொடுக்கப்பட்ட பில்டப்புக்கு அந்தப் படத்தின் ரிலீஸ் தேதியை ஏன் ஒத்திவைக்க வேண்டும் என பலர் கேள்வி எழுப்பினர். இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து படக்குழு தெரிவித்துள்ளது.
படத்தினை இயக்குநர் சிவா கதை, திரைக்கதை எழுது இயக்கியுள்ளார். தேவி ஸ்ரீபிரசாத் இசை அமைத்துள்ளார். கங்குவா படம் கடந்த பொங்கலுக்கே ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படப்பிடிப்புத் தளத்தில் சூர்யாவுக்கு லேசான காயம் ஏற்பட்டதால், படப்பிடிப்பை திட்டமிட்டபடி முடிக்க முடியாமல் போனது. இதனால் படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்ற கேள்வி அனைவருக்கும் எழுந்தது. சி.ஜி பணிகளைப் பார்த்த சிலர், படத்தின் சி.ஜி வேலைகள் ஹாலிவுட் படங்களுக்கு நிகராக உருவாக்கப்பட்டுள்ளது. எனவே படம் எப்போது ரிலீஸ் செய்யப்பட்டாலும் செலவு செய்யப்பட்ட பணத்தை விடவும் பல மடங்கு அள்ளும் என கூறினர். அதேபோல் வேட்டையன் படத்தின் ரிலீஸினால், சூர்யாவின் கங்குவாவின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டது.

சூர்யா அறிவிப்பு: கங்குவா ரிலீஸ் தேதி குறித்து சூர்யா பேசுகையில், " கங்குவா படம், கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகளாக, ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் கடின உழைப்பில் உருவாகியுள்ளது. படம் அக்டோபர் 10ஆம் தேதி ரிலீஸ் செய்ய ப்ளான் செய்யப்பட்டது. ஆனால் அன்றைய தினத்தில் மூத்தவர், நான் பிறக்கும்போது சினிமாவில் நடிக்கத் தொடங்கியவர். 50 ஆண்டுகளாக தமிழ் சினிமாவின் அடையாளமாக இருக்கக்கூடிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் வேட்டையன் படமும் ரிலீஸ் ஆகின்றது. எனவே சூப்பர் ஸ்டாருக்கு மரியாதை செய்வதே சரியாக இருக்கும். கங்குவா ஒரு குழந்தை. அது எப்போது ரிலீஸ் ஆகின்றதோ, அப்போதுதான் அதன் பிறந்த நாள். அன்றைய தினத்தை பண்டிகையாக நீங்கள் கொண்டாடுவீங்கனு நம்புறேன். இந்த நிலையில், நீங்கள் (ரசிகர்கள்) என்னுடன் இருப்பீர்கள் என நினைக்கின்றேன்" என தெரிவித்திருந்தார்.

ரேஸ்: இதனால் கங்குவா படம் 2024ஆம் ஆண்டு ரிலீஸ் ஆகுமா என்ற கேள்வி அனைவருக்கும் எழுந்தது. தயாரிப்பாளர் தனஞ்செயன் கங்குவா இந்த ஆண்டு கட்டாயம் ரிலீஸ் ஆகும் என கூறினார். படம் சோலோவாக ரிலீஸ் ஆனால்தான், முதலீடு செய்த தொகையை அள்ள ஏதுவாக இருக்கும் என படக்குழு நம்பியதால்தான், வேட்டையனுக்கு அக்டோபர் 10ஆம் தேதியைக் கொடுத்துவிட்டு, ரேஸில் இருந்து வெளியேறியுள்ளனர் எனவும் கூறப்பட்டது.

ரிலீஸ் தேதி: இப்படியான நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. படம் வரும் நவம்பர் 14ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது என படக்குழு தெரிவித்துள்ளது. படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த நிலையில் படத்தின் ரிலீஸ் மேலும் இரண்டு வாரங்களுக்கு தள்ளிப் போகின்றது. ஆனாலும் நவம்பர் 14ஆம் தேதி குழந்தைகள் தினம் என்பதைக் கடந்து, அந்த தேதியில் பெரிய படங்கள் ரிலீஸ் ஆகாததால், தமிழில் சோலோ ரிலீஸ்க்கு சரியாக இருக்கும் என படக்குழு முடிவெடுத்து, இந்த தேதியை உறுதிபடுத்தியுள்ளது. இந்த தகவல் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











