Kanguva: கங்குவாவின் கதையும் எஸ். எஸ். ராஜமௌலியின் கதையும் ஒன்னா.. தீயாக பரவும் பேச்சு..

சென்னை: சூர்யா நடிக்கும் அடுத்தத்தடுத்த படங்களின் அப்டேட்டுகள் வந்த வண்ணம் உள்ளது. ஆனால் சிறுத்தை சிவாவுடன் அவர் இணைந்து பணியாற்றிய கங்குவா படம் நவம்பர் 14ஆம் தேதிதான் ரிலீஸ் ஆகவுள்ளது. ஆனால் இந்தப் படம் கடந்த இரண்டு ஆண்களுக்கு மேல் உருவாகி தற்போது ரிலீஸ்க்கு தயாராக உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்புக்கள் எப்போதோ முடிந்திருந்தாலும், படத்தின் சி.ஜி. பணிகள் அனைத்தும் முடிவடைந்து படம் வரும் நவம்பர் 14ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. படத்தின் புரோமோஷன் வேலைகளை படக்குழு மெல்ல மெல்லத் தொடங்கியுள்ளது. படம் நேரடியான தமிழ் படம் என்றாலும், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் படம் ரிலீஸ் ஆகவுள்ளது. இந்நிலையில் படம் எப்படி இருக்கும் என்ற கேள்வி பலரையும் ஆட்கொண்டுள்ளது.

மும்பையில் படத்தின் இயக்குநர் சிறுத்தை சிவாவுடன் இணைந்து சூர்யா புரோமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றார். இதுமட்டும் இல்லாமல், தமிழ் நாட்டில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, நட்டி நட்ராஜ் என படக்குழுவினர் புரோமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றார். இப்படி நாலாபுறமும் புரோமோஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், படத்தின் மீதான ஆர்வம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கங்குவா கிட்டத்தட்ட ரூபாய் 300 கோடியில் இருந்து ரூபாய் 350 கோடிகள் வரையிலான பொருட்ச் செலவில் உருவாக்கப்பட்டுள்ளது.

kanguva suriya 7aum arivu

ஏற்கனவே படம் இந்த மாதம் 10ஆம் தேதி ரிலீஸ் செய்யப்படுவதைப்போல் இருந்தது. ஆனால் அதே தேதியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் வேட்டையன் படம் ரிலீஸ் ஆனதால், மரியாதை நிமித்தமாக கங்குவாவின் ரிலீஸை படக்குழு தள்ளி வைத்தது. இது சூர்யா ரசிகர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. இதனால், படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படம் நவம்பர் 14ஆம் தேதி ரிலீஸ் ஆகின்றது.

kanguva suriya 7aum arivu

சிறுத்தை சிவா: படத்தில் சூர்யாவுடன் பாதி தியோல், தீஷா பதானி, ஜகபதி பாபு, நடராஜன் சுப்ரமணியம், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்தராஜ் என பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது. படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைத்துள்ளார். படம் குறித்து இயக்குநர் சிறுத்தை சிவா கூறுகையில், படம் ஆங்கில வெப் சீரீஸான கேம் ஆஃப் த்ரோன்ஸ் போலான கதை எனக் கூறியிருந்தார். மேலும் படத்தின் கதையை தான் ஏற்கனவே அஜித்திடம் கூறியதாகவும், அவர் கதையைக் கேட்டுவிட்டு பாராட்டியதாகவும் கூறினார்.

kanguva suriya 7aum arivu

ஏழாம் அறிவு: இந்நிலையில் மும்பையில் நடைபெற்ற புரோமோஷனில் படம் எப்படி இருக்கு எனக் கேட்டபோது, படம் மிகவும் அருமையாக வந்துள்ளது. இப்படம் எனது முந்தைய படங்களில் ஒரு படத்தைப் போல் இருக்கும் எனக் கூறியுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் எந்த படம் என்ற கேள்வியை எழுப்பிக் கொண்டு உள்ளது. சூர்யா நடிப்பில் இதற்கு முன்னர் மன்னர் காலத்து கதை மற்றும் சம காலத்து கதையுடன் இணைத்து திரைக்கதை அமைக்கப்பட்டு எடுக்கப்பட்ட படம் என்றால் அது, ஏழாம் அறிவு படம்தான்.

kanguva suriya 7aum arivu

ராஜ மௌலி: இப்படம் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் கடந்த 2011ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இதனால் கங்குவா படம் ஏழாம் அறிவு படத்தைப் போல் இருக்கும் என்ற பேச்சு ஏற்பட்டுள்ளது. இதுமட்டும் இல்லாமல் ராம் சரண் நடிப்பில் எஸ்.எஸ். ராஜமௌலியின் இயக்கத்தில் வெளியான மாவீரன் படமும் நிகழ்காலத்துடன் கடந்த காலத்தை இணைத்து திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும் கதைதான் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே கங்குவா படக்குழு தரப்பில் முதல் 20 நிமிடங்கள் நிகழ்காலக் கதையும், அதன் பின்னர் படம் முழுக்க முழுக்க கடந்த காலக் கதையாகவும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

kanguva suriya 7aum arivu

More from Filmibeat

Read more about: kanguva suriya 7aum arivu
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X