Kanguva: காது வலிக்குதுனு கதறிய ரசிகர்கள்.. மனம் இறங்கிய கங்குவா டீம்.. என்ன சொன்னாங்கனு பாருங்க!
சென்னை: சூர்யா - தீஷா பதானி நடிப்பில் நேற்று அதாவது நவம்பர் 14ஆம் தேதி வெளியான படம் கங்குவா. இப்படத்தினை சிறுத்தை சிவா இயக்கியுள்ளார். படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. படம் தமிழ்நாடு மட்டும் இல்லாமல் இந்தியா முழுவதும் பெரும்பான்மையான தியேட்டர்களில் வெளியானது. படம் பார்த்த ரசிகர்களில் பெரும்பான்மையானவர்கள் படத்தின் இசை மிகவும் மோசமாக இருப்பதாகவும், பின்னணி இசை இரைச்சலாக இருப்பதாகவும் கருத்து தெரிவித்தனர். இப்படியான நிலையில், படக்குழு ஒரு முடிவினை எடுத்து திரையரங்குகளுக்கு அறிவுருத்தியுள்ளனர்.
நடிகர் சூர்யா - தீஷா பதானி உள்ளிட்டோர் நடிப்பில் நேற்று அதாவது நவம்பர் 14ஆம் தேதி ரிலீஸ் ஆன படம் கங்குவா. இந்தப் படத்தினை சுமார் இரண்டரை ஆண்டுகளாக எடுத்து நேற்று திரைக்கு கொண்டு வந்துள்ளது படக்குழு. படம் பார்த்த ரசிகர்கள் படம் குறித்து கலவையான விமர்சனங்களை அளிக்க, படக்குழுவினருக்கு கொஞ்சம் அப்செட் ஏற்பட்டது எனலாம். குறிப்பாக ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனத்தில், கங்குவா காட்டு மொக்கை படம் இல்லை, காடு காடா போய் மொக்கைப் படத்தை எடுத்து வைத்துள்ளார்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் நேற்றுக் காலையில் படத்தினைப் பார்த்த ரசிகர்கள் பலரும் படம் முழுவதும் கத்திக் கொண்டே உள்ளார்கள் என்றும், படத்தின் பின்னணி இசை தெளிவாகவே இல்லை என்றும், முழுக்க முழுக்க இரைச்சலாக இருப்பதாகவும் தெரிவித்து வந்தனர். சூர்யாவில் இருந்து படத்தின் மற்ற கதாபாத்திரங்கள் எதற்கு எடுத்தாலும் கத்திக்கொண்டுதான் இருந்தார்கள். இது படம் பார்க்கும் ரசிகர்களுக்கு பெரும் எரிச்சலை ஏற்படுத்தியது.
கத்திக்கொண்டு: இப்படியான நிலையில் படத்தின் இசை மற்றும் பின்னணி இசை குறித்து ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் பக்கத்தில் தொடர்ந்து பதிவிட்டு வருகின்றார். நேற்று தனது எக்ஸ் பக்கத்தில், " படத்தில் கருணாஸ் முதல் கலைராணி வரை ஏன் கத்துகின்றார்கள் எனத் தெரியவில்லை. அதுவும் ஸ்லோமோஷனில் கத்துகின்றார்கள். சேதமடைந்த செவிப்பறைகளுடன் படம் பார்க்கச் சென்றதற்காக வருந்துகின்றேன். நிச்சயம் லோடு லோடாக பஞ்சு வேண்டும். படத்திற்கு கங்குவா என்பதற்கு பதிலாக கத்துவா என வைத்திருக்கலாம். கத்தாம படம் பாருங்கப்பா.. கத்தறதேபடத்துல இருக்கறவங்கதாப்பா" என பதிவிட்டிருந்தார்.

இசை: தேவி ஸ்ரீ பிரசாத் இசை குறித்து பதிவிடும்போது, "எல்லா விமர்சனமும் கழுவி ஊத்துறது இவரைத்தான். இருக்கற இசைக்கருவிகளை கத்த விட்டது போதாதுன்னு.. அண்டா, குண்டா, தோசை கரண்டில கூட மியூசிக் போட்டு காதை கிழிச்சி இருக்காராம்ல" எனப் பதிவிட்டார். இவரது இந்தப் பதிவிற்கு இணையவாசி ஒருவர், என்ன தலைவரே இந்த முறை மியூசிக் டைரக்ட்டர் பக்கம் வந்து இருக்கீங்க? எனக் கேள்வி எழுப்ப, அதற்கு ப்ளூ சட்டை மாறனோ, ' நம்ம காதாச்சே' எனப் பதிவிட்டார். இவரது இந்தப் பதிவு இணையத்தில் வேகமாக பரவியது.

அட்வைஸ்: இந்நிலையில் படக்குழு தரப்பில் இருந்து, அதாவது ஸ்டூடியோ க்ரீன் தரப்பில் இருந்து திரையரங்க உரிமையாளர்களுக்கு படத்தின் சவுண்ட் அளவினை இரண்டு பாய்ண்ட்கள் குறைவாக வைக்கும் படி அறிவுருத்தியுள்ளனர். இது தொடர்பான தகவல்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.


Click it and Unblock the Notifications











