’ச்சா ச்சா ச்சாரே’... ‘பார்ட்டி’க்காக முதன்முறையாக இணைந்த சூர்யா - கார்த்தி
பார்ட்டி படத்துக்காக முதன்முறையாக சூர்யா, கார்த்தி இருவரும் சேர்ந்து பாடல் ஒன்றைப் பாடியுள்ளனர்.
Recommended Video

சென்னை : வெங்கட் பிரபுவின் பார்ட்டி படத்துக்காக முதன்முறையாக சூர்யா, கார்த்தி இருவரும் சேர்ந்து பாடல் ஒன்றைப் பாடியுள்ளனர்.
சென்னை 28 இரண்டாம் பாகம் வெற்றியைத் தொடர்ந்து, வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'பார்ட்டி'. இப்படத்தில் சத்யராஜ், ஜெயராம், ஜெய், ஷாம், சிவா, சந்திரன், நாசர், சுரேஷ், சம்பத் ராஜ், ரம்யா கிருஷ்ணன், ரெஜினா, சஞ்சிதா ஷெட்டி, நிவேதா பெத்துராஜ் என மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது.
ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு பிரேம்ஜி அமரன் இசையமைத்துள்ளார்.

இசை:
இப்படத்தின் மூலம் முதல்முறையாக வெங்கட் பிரபு படத்துக்கு நடிகர் பிரேம்ஜி இசையமைக்கிறார். இதனால் இப்படத்தின் பாடல்கள் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஷூட்டிங் முடிந்தது:
இப்படத்தை அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி.சிவா தயாரித்துள்ளார். காமெடி கேங்ஸ்டர் படமாக பார்ட்டி உருவாக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்புகள் முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ச்சா பாடல்:
இந்நிலையில், இப்படத்தில் இடம் பெற்றுள்ள பாடல் ஒன்றை சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் இணைந்து பாடியுள்ளனர். 'ச்சா ச்சா ச்சாரே' எனத் தொடங்கும் இப்பாடல், வரும் திங்களன்று ரிலீசாக இருக்கிறது. தற்போது இந்த பாடலுக்கான புரமோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. இது சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.
சூர்யா, கார்த்தி:
ஏற்கனவே, சன் ரைஸ் விளம்பரம், அஞ்சான் உள்ளிட்ட படங்களில் நடிகர் சூர்யா பாடியுள்ளார். இதேபோல், நடிகர் கார்த்தியும் பிரியாணி படத்தில் ஒரு பாடலைப் பாடினார். ஆனால், இருவரும் முதன்முறையாக ஒன்று சேர்ந்து பார்ட்டி படத்திற்காக ஒரு பாடல் பாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











