»   »  படத்திற்காக ஒன்று சேரும் சூர்யா-கார்த்தி, ஆனால்...

படத்திற்காக ஒன்று சேரும் சூர்யா-கார்த்தி, ஆனால்...

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: புதிய படம் ஒன்றுக்காக சூர்யா, கார்த்தி இருவரும் ஒன்று சேர்கிறார்கள்.

பாண்டிராஜ் தயாரிப்பில் வள்ளிகாந்த் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் நடித்து வரும் படம் செம. இந்த படத்தில் ஜி.வி. பிரகாஷுக்கு ஜோடியாக அர்த்தனா நடிக்கிறார்.

கோவை சரளா, மன்சூர் அலி கான், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

சூர்யா

சூர்யா

செம படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. விழாவில் கலந்து கொண்ட ராஜசேகர் பாண்டியன் சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் சார்பில் அறிவுப்பு ஒன்றை வெளியிட்டார்.

கார்த்தி

கார்த்தி

சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் கார்த்தியை வைத்து படம் ஒன்றை தயாரிக்கிறது. அந்த படத்தை பாண்டிராஜ் இயக்குவார் என்று செம விழாவில் அறிவிக்கப்பட்டது.

பாண்டிராஜ்

பாண்டிராஜ்

சூர்யா தனது மனைவி ஜோதிகாவின் 36 வயதினிலே படத்தை தயாரித்தார். தற்போது தம்பியின் படத்தை தயாரிக்க உள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் இந்த ஆண்டு இறுதியில் துவங்குமாம்.

தீரன் அதிகாரம் ஒன்று

தீரன் அதிகாரம் ஒன்று

கார்த்தி தற்போது தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் பிசியாக உள்ளார். சூர்யா விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Actor Suriya's 2D Entertainment will produce his brother Karthi's next yet-untitled Tamil film under Pandiraj's direction, it was announced on Friday.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil