சுட சுட தீபாவளிக்கு கொடுக்க ட்ரை பண்றோம்.. சூர்யாவின் கருப்பு பட இயக்குநர் RJ பாலாஜி நம்பிக்கை!
சென்னை: ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா, த்ரிஷா உள்ளிட்டோர் நடிக்கும் படம் கருப்பு. நெற்று சூர்யாவின் 50 வது பிறந்த நாள் என்பதால், படத்தின் டீசர் படக்குழு தரப்பில் இருந்து வெளியிடப் பட்டது. டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. டீசர் சென்னை ரோகிணி திரையரங்கில் திரையிடப்பட்டது. அப்போது ரசிகர்கள் மத்தியில் பேசிய படத்தின் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி படத்தை முடிந்த அளவுக்கு தீபாவளிக்கு கொடுக்க முயற்சிக்கிறோம் என வாக்குறுதி கொடுத்துள்ளார்.
சூர்யாவின் 45வது படம் கருப்பு. இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகிறார் சாய் அபயங்கர். இவரது ஆல்பம் பாடல்கள் ஏற்கனவே உலக அளவில் டிரெண்ட் என்பதால் இசையமைப்பாளராக இவர் கமிட் ஆகியுள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

டீசர் நேற்று வெளியிடப்பட்டு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. ஆனால் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த ஒன்று டீசரில் இடம் பெறாதது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தது. அதாவது, படத்தின் ரிலீஸ் தேதி குறித்து படக்குழு எதுவும் அறிவிக்கவில்லை. மேலும் படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்வார்கள் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டு உள்ளார்கள். படத்தின் ரிலீஸ் தேதி குறித்து படக்குழு குறிப்பிடமால் இருந்ததற்கு காரணம், படத்தின் ஓடிடி உரிமம் விற்கப்படவில்லை என்பதுதான். இப்படி இருக்கும்போது ரசிகர்கள் மத்தியில் டீசரைப் பார்த்த படத்தின் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி, ரசிகர்கள் டீசரை வரவேற்ற விதத்தைப் பார்த்து, உற்சாகமடைந்தார்.
தீபாவளிக்கு: அப்போது அவர் பேசுகையில் ரசிகர்கள் தரப்பில் இருந்து படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்யுங்கள் என கோரிக்கை வைத்தனர். அதற்கு உடனே, " எங்களால் முடிந்த அளவுக்கு சுடச்சுட தீபாவளிக்கு கொடுக்க முயற்சி செய்கிறோம். நீங்கள் தீபாவளிக்காக எப்படி காத்துக் கொண்டு இருக்கிறீர்கள் என்பது எனக்குத் தெரியும். ஒரு ஆண்டு காலமாக நாங்கள் இந்த படத்திற்காகத்தான் உழைத்துக் கொண்டு உள்ளோம். எனது மொத்த டீமும் இங்கு உள்ளது.

சாய் அபயங்கர்: இங்கு சாய் அபயங்கர் உள்ளார். அவரது முதல் படம் இது. அவரது முதல் படத்துக்கு நீங்கள் இந்த அளவுக்கு வரவேற்பு கொடுத்தது மகிழ்ச்சி. இந்த ஒரு நாளில் அவருக்கு பயங்கரமான லவ் கொடுத்து உள்ளீர்கள். இப்போது மிகவும் நம்பிக்கையாக, சந்தோஷமாக உள்ளார். அதற்கு முன்னர் வரை பயந்து கொண்டே இருந்தார்.
ரசிகர்கள் எதிர்பார்ப்பு: இந்த படத்தை நாங்கள் ஐந்து பேர் இணைந்து எழுதியுள்ளோம். அதை தொடர்ந்து பேசிய இசையமைப்பாளர் சாய் அபயங்கர் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார். மேலும் டீசரில் உள்ள இசை பிடித்துள்ளதா எனவும் கேட்டார். அதற்கு ரசிகர்கள் ஆரவாரம் செய்து அன்பை வெளிப்படுத்தினர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய முயற்சிக்கிறோம் என ஆர்.ஜே. பாலாஜி கூறியுள்ளதால் ரசிகர்கள் நம்பிக்கையோடு உள்ளனர்.


Click it and Unblock the Notifications











