Suriya: “முன்னாடியே திருமணத்துக்கு வர மாட்டேன்னு சொன்னார்” சூர்யா பற்றி மனம் திறந்த KV ஆனந்த் மனைவி
சென்னை: மறைந்த இயக்குநர் கேவி ஆனந்தின் குடும்பத்தினரை சூர்யா நேரில் சந்தித்த புகைப்படங்கள் இரு தினங்களுக்கு முன்னர் வைரலாகின. திருமணமான கேவி ஆனந்தின் மகளுக்கு வாழ்த்துத் தெரிவிக்கவே சூர்யா நேரில் சென்றிருந்தார். அப்போது சூர்யாவின் அப்பா சிவகுமாரும் உடன் இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சூர்யா தனது இல்லம் வந்து சென்றது பற்றி கேவி ஆனந்த் மனைவி சசிகலா மனம் திறந்துள்ளார்.
சூர்யாவும் கேவி ஆனந்தும் அந்த மாதிரி
சூர்யா கேரியரில் மிகப் பெரிய கம்பேக் கொடுத்த திரைப்படம் கேவி ஆனந்த் இயக்கத்தில் வெளியான அயன். 2009ம் ஆண்டு ரிலீஸான இந்தப் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் அளவிலும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இதனைத் தொடர்ந்து சூர்யா - கேவி ஆனந்த் கூட்டணியில் மாற்றான், காப்பான் படங்கள் வெளியாகின. இந்தப் படங்களுக்கும் ரசிகர்களிடம் நலல் வரவேற்பு இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கேவி ஆனந்தின் குடும்பத்தினரை சூர்யாவும் அவரது அப்பா சிவகுமாரும் இரு தினங்களுக்கு முன்னர் நேரில் சந்தித்திருந்தனர். கேவி ஆனந்தின் மகளுக்கு சமீபத்தில் திருமணம் ஆனதை முன்னிட்டு அவருக்கு வாழ்த்துத் தெரிவிக்க சூர்யா சென்றிருந்தார். அதோடு மணமக்களுக்கு மார்ஷல் ஸ்பீக்கரும் அன்பளிப்பாக கொடுத்தார் சூர்யா. அதேபோல் சிவகுமாரும் தனது ஓவியங்களையும் புத்தகங்களையும் அன்பளிப்பாக வழங்கினார்.

கேவி ஆனந்த் மறைந்த பின்னரும் அவரது குடும்பத்தினருடன் சூர்யா நெருங்கி பழகி வருவது ரசிகர்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதுபற்றி கேவி ஆனந்தின் மனைவி சசிகலா மனம் திறந்துள்ளார். அதில், சூர்யா குடும்பத்துக்கும் எங்களுக்கும் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நல்ல பழக்கம் உள்ளது. கேவி ஆனந்த் 5வது படிக்கும் போது ஓவியப் போட்டியில் முதல் பரிசு வாங்கினார். அந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்த சிவகுமார் தான் பரிசை வழங்கினார்.
அதேபோல் சூர்யா அறிமுகமான நேருக்கு நேர் படத்துக்கு கேவி ஆனந்த் தான் ஒளிப்பதிவாளர். அப்போது முதலே இருவரும் நல்ல நண்பர்களாக பழகி வந்தனர். எனது கணவரை சூர்யா 'அண்ணா' என்று தான் கூப்பிடுவார். அதில் கொஞ்சம் கூட போலித்தன்மை இருக்காது, அவ்வளவு ஆத்மார்த்தமாக இருக்கும் சூர்யாவின் அன்பு. எனது மூத்த மகள் சாதனாவுக்கு கடந்தாண்டு திருமணம் ஆனது. அதற்காக சூர்யாவுக்கு இன்விடேஷன் வைக்கப் போனப்போதே, அந்த தேதில ஷூட்டிங் இருக்குறதால வரமுடியாதுன்னு சொல்லிட்டார்.

ஆனாலும் திருமணம் அன்னைக்கு சூர்யா அவரோட மேனேஜர் கிட்ட கோல்ட் காயின்ஸ் கிஃப்ட்டா கொடுத்து அனுப்பிருந்தார். ஆனாலும் அதோட விட்டுடாம திடீர்ன்னு வீட்டுக்கு வந்து சர்ப்ரைஸ் கொடுத்தார். சூர்யாவுக்காக இடியாப்பம், இறால் ஃப்ரை, ஃபிஷ் ஃப்ரை, காய்கறி சூப், புல்கா, சிக்கன் சமைச்சு கொடுத்தேன். சிவகுமார் சாருக்கு வெஜிடேரியன் சமையல் ரெடி பண்ணேன். அவங்க ரெண்டு பேருமே என்னோட பொண்ணுங்க கூட சேர்ந்து சாப்பிட்டாங்க.

அப்போ "அண்ணன் இல்லாத வருத்தம் எப்பவும் மனசுல இருக்கும் நாங்க இருக்கோம். எதுக்கும் கவலைப்படாதீங்க" என சூர்யா சொன்னதுல எல்லோருக்குமே சந்தோஷம் என மறைந்த இயக்குநர் கேவி ஆனந்தின் மனைவி சசிகலா மனம் திறந்துள்ளார்.


Click it and Unblock the Notifications











