10 ரூபாய்க்காக 86390 ரூபாயை தூக்கி வீசிடுவீங்களா.. எவ்ளோ பெரிய விஷயத்தை எப்படி சொல்லிட்டாரு சூர்யா!

சென்னை: சமீபத்தில் தனது அகரம் அறக்கட்டளை சார்பாக நடந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சூர்யா மாணவர்களை மோட்டிவேட் செய்வது போல பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

நெகட்டிவிட்டியில் இருந்து எப்படி விலகி நம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என சூர்யா பேசியதை அவரது ரசிகர்கள் அதிகம் ஷேர் செய்து வருகின்றனர்.

பெரிய ஹீரோக்களுக்கு மட்டுமின்றி பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு கூட தற்போது நெகட்டிவிட்டி மிகப்பெரிய விஷயமாக மாறி பலரை பாதிப்புக்குள்ளாக்கி வருகிறது.

Suriya latest motivational kutty story trending in social media

அகரம் அறக்கட்டளை: மாணவர்களுக்கு கல்வி சேவையை செய்ய நடிகர் விஜய் பல ஆண்டுகள் கழித்து தற்போது தான் கவனத்தை செலுத்தி வரும் நிலையில், கடந்த 2006ம் ஆண்டே நடிகர் சூர்யா அகரம் ஃபவுண்டேஷனை ஆரம்பித்து 17 ஆண்டுகளாக வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.

வறுமை காரணமாக கல்வி படிப்பை தொடர முடியாமல் இருந்த பல ஆயிரம் மாணவர்களுக்கு கல்வி அறிவு கொடுத்தது மட்டுமின்றி அவர்களை பெரிய பதவிகளில் அமர்த்தும் அளவுக்கு ஏகப்பட்ட நடவடிக்கைகளையும் சூர்யாவின் அகரம் ஃபவுண்டேஷன் செய்து வருகிறது.

சூர்யா பேச்சு: விஜய் கல்வி விருதை பத்தாம் மற்றும் பதினொன்றாம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த 234 தொகுதியை சேர்ந்த மாணவர்களுக்கு அரசியல் நோக்குடன் செய்து வருவதாக சொல்லப்பட்டு வரும் நிலையில், நடிகர் சூர்யாவும் உடனடியாக அகரம் அறக்கட்டளையில் விழா ஒன்றை நடத்தி பேசி இருப்பது பெரும் விவாதத்தை கிளப்பி உள்ளது.

அந்த நிகழ்ச்சியில் சூர்யா நெகட்டிவிட்டிக்கு எதிராக பேசிய வீடியோ ஒன்று சூர்யா ரசிகர்களை மட்டுமின்றி பலரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.

10 ரூபாய்க்காக 86390 ரூபாயை தூக்கி வீசிடுவீங்களா: ரஜினிகாந்த் குட்டிக் கதை சொல்லி ஹிட் அடித்த நிலையில் விஜய் குட்டி ஸ்டோரி சொல்ல ஆரம்பித்தார். இந்நிலையில், நடிகர் சூர்யாவும் ஒரு அழகான குட்டி கதையை அதிலும் தத்துவம் நிறைந்த கதையை சொல்லி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளார்.

உங்கள் வங்கிக் கணக்கில் 86400 ரூபாய் இருப்பதாக வைத்துக் கொள்ளுங்கள், அதில் ஒரு 10 ரூபாய் தொலைந்து விடுகிறது. அதற்காக உங்கள் வங்கிக் கணக்கில் இருக்கும் 86390 ரூபாயை தூக்கி வீசிடுவீங்களா என கேட்ட நடிகர் சூர்யா, ஒரு நாளில் மொத்தம் 86400 நொடிகள் உள்ளன.

அதில், யாராவது நம்மை பற்றி அவதூறாக 10 நொடிகள் பேசிவிட்டால், அந்த நெகட்டிவிட்டிக்காக நாம் ஏன் 86390 நல்ல நொடிகளை வீணடித்து அந்த நாளையே வீணாக்க வேண்டும் என கேட்டு அனைவரையும் சிந்திக்க வைத்துள்ளார். சமூக வலைதளங்களில் அதிகம் நெகட்டிவிட்டி பரவி வரும் நிலையில், அதை எல்லாம் கண்டுக்காமல் நல்ல விஷயங்களை செய்யுங்கள் என பேசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X