ஓராண்டாக சூர்யா என்.ஜி.கே.வாகவே வாழ்ந்தார்: செல்வராகவன் புகழாரம்

By Siva

சென்னை: தன் என்.ஜி.கே. பட ஹீரோ சூர்யாவை பாராட்டி ட்வீட் செய்துள்ளார் இயக்குநர் செல்வராகவன்.

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா, சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்டோர் நடித்த என்.ஜி.கே. படம் கடந்த 31ம் தேதி வெளியானது. படத்தை பார்த்தவர்கள் முடியல என்று தெரிவித்தாலும் வசூல் பாதிக்கவில்லை.

படம் ரிலீஸான 7 நாட்களில் உலக அளவில் ரூ. 100 கோடி வசூலித்துவிட்டதாகக் கூறி ஹேஷ்டேக் எல்லாம் போட்டு ட்விட்டரை தெறிக்கவிட்டார்கள் சூர்யா ரசிகர்கள்.

பிரச்சனை

பிரச்சனை

என்.ஜி.கே. படத்தில் நடித்தபோது சூர்யாவுக்கும், செல்வராகவனுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது என்று கூறப்பட்டது. இயக்குநரை மாற்ற சூர்யா விரும்புவதாகவும் கிசுகிசுக்கப்பட்டது. என்.ஜி.கே. ரிலீஸுக்கு முன்பு ஹைதராபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் இந்த பேச்சுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைத்தார் சூர்யா. இந்நிலையில் செல்வராகவனும் தன் பங்கிற்கு ட்வீட் செய்துள்ளார்.

செல்வராகவன்

என்.ஜி.கே. படத்தில் அருமையாக நடித்த சூர்யாவுக்கு நான் எப்பொழுதும் நன்றியுடன் இருப்பேன். அவர் ஓராண்டு காலமாக என்.ஜி.கே.வாகவே வாழ்ந்தார். அவர் எங்கள் அனைவருக்கும் ஆதரவாக இருந்தார். மிக்க நன்றி சார். நான் எப்பொழுதும் சொல்வது போன்று நீங்கள் இயக்குநர்களின் மனம் கவர்ந்தவர் என்று ட்வீட் செய்துள்ளார் செல்வராகவன்.

சூர்யா

சூர்யா

என்.ஜி.கே. படத்தின் ஷூட்டிங் இழுத்துக் கொண்டே போனதால் தான் சூர்யா, செல்வராகவன் இடையே பிரச்சனை ஏற்பட்டது என்று செய்திகள் வெளியாகின. இந்நிலையில் செல்வராகவனின் ட்வீட்டை பார்த்தால் அப்படி எந்த பிரச்சனையும் இருந்தது போன்று இல்லையே என்று சிலரும், பிரச்சனையை மறைக்கவே இப்படி மாறி, மாறி புகழ்ந்து கொள்கிறார்கள் என்று சிலரும் கமெண்ட் செய்துள்ளனர்.

என்.ஜி.கே. 2

என்.ஜி.கே. படம் ரிலீஸானதில் இருந்தே அதன் இரண்டாம் பாகத்தை எடுக்குமாறு சூர்யா ரசிகர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இந்நிலையில் செல்வராகவனின் ட்வீட்டை பார்த்த அவர்கள், சார் என்.ஜி.கே. 2 என்று மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர். செல்வராகவன் சரி அவரின் மனைவி கீதாஞ்சலியிடமும் கோரிக்கை விடுக்கிறார்கள் சூர்யா ரசிகர்கள். சூர்யா அண்ணாவை வைத்து என்.ஜி.கே. 2 எடுக்குமாறு சாரிடம் சொல்லுங்க அக்கா என்று கீதாஞ்சலியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X