பாதியிலேயே முடிவுக்கு வந்த வணங்கான்... பட்ஜெட்டில் வேட்டு வைத்த பாலா... கோபத்தில் சூர்யா?

சென்னை: நந்தா, பிதாமகன் படங்களைத் தொடர்ந்து சூர்யா - பாலா கூட்டணி மீண்டும் வணங்கான் படத்தில் இணைந்தது.

சூர்யா ஜோடியாக கிருத்தி ஷெட்டி நடிக்க வணங்கான் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கியது.

விரைவில் வணங்கான் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், படம் பாதியிலேயே கைவிடப்படுவதாக பாலாவும் சூர்யாவும் அறிவித்தனர்.

 சூர்யா - பாலா கூட்டணி

சூர்யா - பாலா கூட்டணி

சூர்யாவின் கேரியரில் மிகப் பெரிய கம்பேக் கொடுத்தது இயக்குநர் பாலா தான். நந்தா படத்தில் சூர்யாவை ஹீரோவாக்கிய பாலா, அவரது நடிப்பையும் உலகறியச் செய்தார். அதன்பின்னர் இந்த ஜோடி பிதாமகன் படத்தில் இணைந்தது. இந்த முறை பாலாவின் ஃபேவரைட்டான சியான் விக்ரமும் பிதாமகன் படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்தார். அதன் பின்னர் சைலண்டாகவே இருந்த சூர்யா - பாலா கூட்டணி, வணங்கான் படம் மூலம் ஒன்று சேர்ந்தது. சூர்யா தயாரித்து அவரே ஹீரோவாக நடிப்பதாக அறிவிக்கப்பட்டது

 டிராப் ஆன வணங்கான்

டிராப் ஆன வணங்கான்

சூர்யா ஜோடியாக கிருத்தி ஷெட்டி கமிட் ஆக, இசையமைப்பாளராக ஜிவி பிரகாஷும் வணங்கான் படத்தில் இணைந்தார். இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கன்னியாகுமாரி பகுதிகளில் தொடங்கியது தொடர்ந்து 30 நாட்கள் வரை நடைபெற்ற இந்த படப்பிடிப்பில் சூர்யாவும் கலந்துகொண்டார். வணங்கான் படப்பிடிப்பு ஏராளமான ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்களுடன் தொடங்கியதாகவும் சொல்லப்பட்டது. மேலும், ஷூட்டிங் ஸ்பாட்டில் சூர்யா - பாலா இணைந்து எடுத்துக்கொண்ட போட்டோவும் வெளியாகி வைரலானது. இந்நிலையில், திடீரென வணங்கான் படம் கைவிடப்படுவதாக பாலா அறிவித்தார்.

 பட்ஜெட்டில் 10 கோடி நஷ்டம்

பட்ஜெட்டில் 10 கோடி நஷ்டம்

கதையில் இருக்கும் மாற்றங்கள் சூர்யாவுக்கு செட் ஆகாது என்பதால், அவர் நலன் கருதி வணங்கான் படத்தை கைவிடுவதாக பாலா தெரிவித்திருந்தார். சூர்யாவும் வணங்கான் படத்தில் இருந்து வெளியேறிவிட்டதாக அறிக்கை விட்டு விளக்கம் கொடுத்திருந்தார். இந்நிலையில், இந்தப் படத்தின் படப்பிடிப்புக்காக இதுவரை 10 கோடிக்கும் அதிகமாக செலவு செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. இப்போது படம் மொத்தமும் கைவிடப்படுவதால், இது சூர்யாவுக்கு பெரிய நஷ்டமாக பார்க்கப்படுகிறது. இதனால், சூர்யா ரொம்பவே நொந்து போயுள்ளாராம்.

 பாலா மீது கோபத்தில் சூர்யா

பாலா மீது கோபத்தில் சூர்யா

வணங்கான் முதற்கட்ட படப்பிடிப்புக்கே 10 கோடி ரூபாய் வரை செல்வாகியுள்ளது, சூர்யாவை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதனால், பாலா மீது சூர்யா கோபமாக இருப்பதாக சொல்லப்படுகிறது. சூர்யாவுக்கு கம்பேக் கொடுத்த பாலாவே, இப்போது அவருக்கு நஷ்டம் ஏற்பட காரணமாகிவிட்டாரே என ரசிகர்கள் கூறி வருகின்றனர். முன்னதாக விக்ரமும் அவரது மகன் துருவை பாலா இயக்கத்தில் நடிக்க வைக்க முயற்சித்தார். அர்ஜுன் ரெட்டியின் ரீமேக்காக உருவான அந்தப் படமும் பாதியிலேயே டிராப் ஆனது. விக்ரம், சூர்யா இருவரும் பாலாவின் பட்டறையில் இருந்து புத்துயிர் பெற்ற நிலையில், அவர்களே இப்போது பாலாவின் மீது நம்பிக்கை இல்லாமல் போய்விட்டார்களே எனவும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X