சூர்யாவால் கதறி அழுத அமிதாப் பச்சன்... அப்படி என்ன தான் நடந்தது ?

மும்பை : இந்திய சினிமாவின் எவர்க்ரீன் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் அமிதாப் பச்சன். இவருக்கும் தமிழ் சினிமாவிற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. மறைந்த நடிகர் திலகம் சிவாஜி, ரஜினி, கமல் என பலரும் அமிதாப்பிற்கு இப்போது வரை நெருங்கிய நண்பர்களாக இருந்து வருகின்றனர்.

தமிழ் சினிமாக்களை பார்த்து விட்டு பாராட்டுவது, தமிழ் திரைப்பட விழாக்களில் கலந்து கொள்வது ஆகியவற்றை அமிதாப் வழக்கமாக வைத்துள்ளார். அப்படி சமீபத்தில் அவர், தமிழ் படம் ஒன்றை பார்த்து விட்டு கண்ணீர் விட்டு கதறி, கதறி அழுதுள்ளார்.

கண்ணீர் விட்ட அமிதாப்

கண்ணீர் விட்ட அமிதாப்

2 நாட்களுக்கு முன் இரவில் சூர்யா நடித்த சூரரைப் போற்று படத்தை தான் அமிதாப் பச்சன் பார்த்துள்ளார். அந்த படத்தில் வரும் கையிலே ஆகாசம் என்ற பாடலை பார்த்து தான் அமிதாப் கண்ணீரை கட்டுப்படுத்த முடியாமல் கதறி அழுதுள்ளார்.

உருக்கமான கருத்து

உருக்கமான கருத்து

ஜி.வி.பிரகாஷ் இசையமைத்த இந்த பாடலை அவரது மனைவி சைந்தவி பாடியிருந்தார். மிகவும் எமோஷனலான இந்த பாடலை பார்த்து விட்டு அழுததுடன், மிக உருக்கமாக கருத்தையும் பதிவிட்டுள்ளார் அமிதாப் பச்சன்.

வெள்ளமாக வந்த கண்ணீர்

வெள்ளமாக வந்த கண்ணீர்

அமிதாப் வீடியோவாக பதிவிட்ட கருத்தில், சில நேரங்களில் உணர்ச்சிகள் எதிர்பார்க்காத அளவிற்கு பீறிட்டு வெளி வருவதுண்டு. அப்படி ஒரு சம்பவம் தான் நேற்று இரவு நடந்தது. மிக பெரிய உணர்ச்சி பெருக்கு. என்னால் கண்ணீரை கட்டுப்படுத்தவே முடியவில்லை. ஒவ்வொரு முறையும் கண்ணில் இருந்து கண்ணீர் வெள்ளம் போல் கொட்டியது.

தென்னிந்திய சூப்பர் ஸ்டார்

தென்னிந்திய சூப்பர் ஸ்டார்

அந்த தருணத்தை விரிவாக பகிர முடியவில்லை. இருந்தாலும் இங்கு சொல்கிறேன். ஒரு தமிழ் பாடல், சூர்யா நடித்த படம். சூர்யா, தென்னிந்திய சூப்பர் ஸ்டார். அந்த வீடியோவை பார்த்த போது மனது நொருங்கி விட்டது. வித்தியாசமான உணர்வு. மிக தத்ரூபமாக இருந்தது அந்த வீடியோவில் சூர்யாவின் உணர்வு.

கண்ணீரை கட்டுப்படுத்த முடியல

கண்ணீரை கட்டுப்படுத்த முடியல


அந்த தத்ரூபமாக உணர்ச்சியை வெளிப்படுத்திய விதம் தான் என்னால் கண்ணீரை கட்டுப்படுத்த முடியாமல் போனதற்கு காரணம். அந்த தந்தை - மகன் இடையேயான அற்புதமான உணர்வு. இது தான் அந்த வீடியோ என குறிப்பிட்டுள்ளார்.

மொழிபெயர்த்த அமிதாப்

மொழிபெயர்த்த அமிதாப்

தான் கண்ணீர் விட்டு அழுததை சொன்னதுடன், அந்த பாடல் வரிகளை தன்னால் முடிந்த வரை மொழிபெயர்ப்பும் செய்து பதிவிட்டிருந்தார் அமிதாப் பச்சன். இதை பார்த்து விட்டு அமிதாப்பை சோஷியல் மீடியாவில் பின்தொடர்பவர்களும் இந்த பாடலை பாராட்டி உள்ளனர்.

 அனைவரையும் கலங்க வைத்த பாடல்

அனைவரையும் கலங்க வைத்த பாடல்

மிக குறைந்த கட்டணத்தில் விமானத்தில் பயணம் செய்து இறங்கி வரும் கிராமத்து பாட்டிகள், நண்பர்கள், மணக்கோலத்தில் திருமண ஜோடி, மறைந்த அப்பாவின் ஃபோட்டோவுடன் வரும் அம்மா ஊர்வசி ஆகியோரை பார்த்து கண்கலங்கி, உணர்ச்சி பெருக்குடன் சூர்யா நிற்பதாக இந்த பாடல் காட்சி அமைக்கப்பட்டிருக்கும்.

தொடரும் பாராட்டு மழை

தொடரும் பாராட்டு மழை

சுதா கொங்கரா இயக்கிய சூரரைப் போற்று படம் ஏற்கனவே மக்கள் மனதை வென்றதுடன் சர்வதேச திரைப்பட விழாக்கள் பலவற்றிலும் திரையிடப்பட்டு, பல விருதுகளை வென்றுள்ளது. ஓடிடி.,யில் அதிக முறை பார்க்கப்பட்ட தென்னிந்திய சினிமா என்ற பெருமையையும் தட்டிச் சென்று, பல சாதனைகளையும் செய்துள்ளது. இந்நிலையில் அமிதாப் பச்சனும் பாராட்டி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X