மாஸ்டர் பிளாஸ்டர் உடன் நடிப்பின் நாயகன்.. டிரெண்டாகும் சச்சின் - சூர்யா திடீர் சந்திப்பு புகைப்படம்!

சென்னை: கிரிக்கெட் உலகின் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கர் உடன் நடிகர் சூர்யா சந்தித்து எடுத்துக் கொண்ட லேட்டஸ்ட் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சச்சின் உடன் சூர்யாவை பார்த்த ரசிகர்கள் இன்றைய பிக் ஆஃப் தி டேவே இதுதான் என சமூக வலைதளங்களில் அந்த புகைப்படத்தை அதிகம் ஷேர் செய்து வருகின்றனர்.

கிரிக்கெட் வீரர்கள் சமீப காலமாக சினிமாவில் ஆர்வம் காட்டி வரும் நிலையில், சச்சினுக்கும் அந்த ஐடியா ஏதாவது உள்ளதா என கேள்விகளும் கிளம்பி உள்ளன.

சாதனை நாயகன் சச்சின்

சாதனை நாயகன் சச்சின்


கிரிக்கெட் உலகின் சாதனை நாயகனாக பல ஆண்டுகள் வலம் வந்த சச்சின் டெண்டுல்கருக்கு உலகளவில் ரசிகர்கள் உள்ளனர். இந்தியாவில் வீக்கெண்ட் ஆனால், கிரிக்கெட் பேட் உடன் பசங்க விளையாட செல்வதற்கு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷனே சச்சின் டெண்டுல்கர் தான். தோனி பயோபிக் படமாக வெளியானதை போலவே சச்சின் எ பில்லியன் ட்ரீம்ஸ் ஆவண திரைப்படம் கடந்த 2017ல் வெளியானது.

தயாரிப்பில் இறங்கிய தோனி

தயாரிப்பில் இறங்கிய தோனி

கிரிக்கெட் வீரர்கள் சமீப காலமாக சினிமாவில் கவனம் செலுத்தி வருகின்றனர். சுஷாந்த் சிங் ராஜ்புத்தை வைத்து தனது பயோபிக்கை உருவாக்கிய தோனி தற்போது தமிழில் தனது முதல் படத்தையே தயாரித்து வருகிறார். ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா மற்றும் யோகி பாபு நடிப்பில் உருவாகி வரும் அந்த படத்திற்கு LGM - Lets Getting Married என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

சூர்யா - சச்சின் சந்திப்பு

சூர்யா - சச்சின் சந்திப்பு

இந்நிலையில், சத்தமே இல்லாமல் சச்சினை சந்தித்த நடிகர் சூர்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவருடன் எடுத்துக் கொண்ட போட்டோவை பதிவிட்டு Respect and Love என கேப்ஷன் போட்டுள்ளார். சூர்யா 42 படத்தில் பிசியாக நடித்து வரும் சூர்யா திடீரென சச்சின் டெண்டுல்கரை சந்தித்தது ஏன் என்கிற கேள்விகளும் கோலிவுட்டில் கிளம்பி உள்ளன.

ஜோதிகா வீட்டு விஷேசத்திற்கு போகல

ஜோதிகா வீட்டு விஷேசத்திற்கு போகல

சமீபத்தில் நடிகை ஜோதிகா மற்றும் நக்மா கலந்து கொண்ட உறவினர் திருமண விழாவில் ஜோதிகாவின் மகள் தியா மற்றும் மகன் தேவ் என ஒட்டுமொத்த குடும்பமே கலந்து கொண்ட புகைப்படங்கள் வெளியாகின. ஆனால், நடிகர் சூர்யா மட்டும் அந்த திருமண விழாவில் கலந்து கொள்ளவில்லை. சூர்யா 42 படத்தில் பிசியாக சூர்யா நடித்து வரும் நிலையில், திருமண விழாவில் கலந்து கொள்ளவில்லை என தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X