தம்பி பாண்டிச்சேரி ராஜேந்திரன் நம்மை விட்டுப் பிரிந்து விட்டார்.. ரசிகர் உயிரிழப்பு.. சூர்யா இரங்கல்

சென்னை: நடிகர் சூர்யாவின் ரசிகர் மன்ற நிர்வாகியான பாண்டிச்சேரி ராஜேந்திரன் உயிரிழந்துள்ளார்.

விக்ரம் படத்தின் வெற்றியால் சந்தோஷத்தில் இருந்து வந்த நடிகர் சூர்யாவுக்கு திடீரென இப்படியொரு அதிர்ச்சியான செய்தி கிடைத்த நிலையில், மனமுடைந்து போயுள்ளார்.

சமீபத்தில் தான் சூர்யாவின் ரசிகர் மன்ற நிர்வாகியான ஜெகதீஷ் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

சூர்யா ரசிகர் உயிரிழப்பு

சூர்யா ரசிகர் உயிரிழப்பு

புதுச்சேரி மாநில சூர்யா தலைமை நற்பணி இயக்க தலைவர் ராஜேந்திரன் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று (ஜூன் 3) காலமானார். சூர்யா ரசிகர்கள் பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் சூர்யா இந்த தகவலை அறிந்ததும் மிகவும் மனவேதனையுடன் தற்போது சமூக வலைதளத்தில் இரங்கல் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

தம்பி பாண்டிச்சேரி ராஜேந்திரன்

தம்பி பாண்டிச்சேரி ராஜேந்திரன்

"என் மீது பேரன்பும் உரிமையும் கொண்ட தம்பி பாண்டிச்சேரி ராஜேந்திரன் உடல்நலக் குறைவால் நம்மை விட்டுப் பிரிந்து விட்டார். ஏற்க இயலாத அவரின் இழப்பு மீளா துயரத்தில் ஆழ்த்துகிறது. அவருடைய குடும்பத்தினரின் துயரில் ஒரு சகோதரனாய் பங்கெடுக்கிறேன்!!" என பதிவிட்டு ராஜேந்திரனின் புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.

ரசிகர்கள் இரங்கல்

ரசிகர்கள் இரங்கல்

"20 ஆண்டுகள் மேலாக பணியாற்றிய புதுச்சேரி மாநில சூர்யா தலைமை நற்பணி இயக்க தலைவர் அண்ணன் ராஜேந்திரன் அவர்களின் மறைவிற்க்கு மதுரை மாநகர் மாவட்ட சூர்யா தலைமை நற்பணி இயக்கம் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்" என சூர்யா ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ரசிகர் ஜெகதீஷ் மரணம்

ரசிகர் ஜெகதீஷ் மரணம்

கடந்த வாரம், நடிகர் சூர்யாவின் ரசிகர் மன்றத்தை சேர்ந்த நாமக்கல் மாவட்ட செயலாளர் ஜெகதீஷ் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். சமீபத்தில், நடிகர் சூர்யா உயிரிழந்த ஜெகதீஷின் இல்லத்திற்கு சென்று அவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. ரசிகர் மறைவுக்கு சூர்யா கண்ணீர் அஞ்சலி செலுத்திய புகைப்படங்களும் வெளியாகின.

டிரெண்டிங்கில் ரோலக்ஸ்

டிரெண்டிங்கில் ரோலக்ஸ்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய்சேதுபதி, பகத் ஃபாசில் நடிப்பில் வெள்ளிக்கிழமை வெளியான விக்ரம் படம் உலகளவில் மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தி வருகிறது. அந்த படத்தில் கடைசியாக ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் சூர்யா நடித்துள்ள நிலையில், #Rolex ஹாஷ்டேக்கை சூர்யா ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர். அந்த சந்தோஷத்தில் சற்று முன்னர் தான் கமலுக்கு நன்றி தெரிவித்திருந்தார் சூர்யா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X