இந்தளவுக்கு ஆகிப்போச்சே! சூர்யா - ஜோ இடையே அதிகரிக்கும் விரிசல்? என்னதான் பிரச்னை? ரசிகர்கள் வேதனை!

சென்னை: நடிகர் சூர்யாவும் நடிகை ஜோதிகாவும் கடந்த 2006ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். முதலில் சூர்யாவின் காதலுக்கு அவரது தந்தையான சிவக்குமார் பச்சைக் கொடி காட்டவில்லை என கூறப்பட்டது. ஆனால் அதன் பின்னர் அவரது சம்மதத்தில் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு தியா என்ற மகள் உள்ளார். தியாவுக்கும் கிட்டத்தட்ட 17 ஆண்டுகள் ஆகின்றது. இவர்களுக்கு திருமணம் நடைபெற்று 18 ஆண்டுகள் ஆகின்றது. தமிழ் சினிமா திரையுலகிலேயே மிகவும் க்யூட்டான ஜோடி எனப் பெயர் பெற்ற இவர்களின் சமீபத்திய நடவடிக்கைகள் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அது தொடர்பாக இந்தத் தொகுப்பில் காணலாம்.

சூர்யாவைத் திருமணம் செய்து கொண்ட பின்னர் ஜோதிகா படங்களில் நடிக்கவில்லை. அதன் பின்னர் நடித்த படங்களிலும் சூர்யாவுடன் தான் நடித்தார். இருவரும் பல நிகழ்ச்சிகளில் ஜோடியாகவே கலந்து கொண்டனர். படங்களில் சூர்யா பேசும்போது கூட ஜோதிகா குறித்து பேசும் வசனங்கள் இடம் பெற்றுள்ளது. இவ்வளவு நெருக்கமாக இருந்த ஜோடியின் நடவடிக்கை ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.

suriya jyotika jyotika suriya

அதாவது மகள் தியா இயக்கிய ஆவணப்படம் குறித்து ஜோதிகா முதன் முதலில் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்தார். அப்போது அந்த ஆவணப் படத்தின் போஸ்டரையும் தனது மகள் வென்ற புகைப்படத்தையும் பகிர்ந்திருந்தார். மேலும் தனது மகள் குறித்தும் அவர் இயக்கியுள்ள ஆவணப்படம் குறித்தும் பெருமையாக பதிவிட்டார். ஆனால் அதில் சூர்யாவை டேக் செய்யவில்லை. இதுவே பலருக்கும் சந்தேகத்தை கிளப்பியது.

suriya jyotika jyotika suriya

சூர்யா: இதுமட்டும் இல்லாமல் சூர்யா இது குறித்து பதிவிட்டபோதும் கூட தனது மகள் குறித்து பெருமையாக எழுதினார். அதில் உனது அப்பா என்பதில் பெருமை கொள்கின்றேன் தியா எனக் குறிப்பிட்டிருந்தார். சூர்யாவும் தனது கேப்ஷனில் ஜோதிகா குறித்து எழுதவும் இல்லை, ஜோதிகாவை டேக் செய்யவும் இல்லை. இவையெல்லாம் ஒருபுறம் இருக்க சூர்யா தனது பதிவில் தனது மகளின் புகைப்படத்தைப் பகிரவில்லை. மாறாக தனது மகள் இயக்கிய ஆவணப்படத்தின் போஸ்டரை மட்டுமே பகிர்ந்தார். இதுவும் ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகின்றது.

suriya jyotika jyotika suriya

மகள் படம்: அதாவது சூர்யாவுக்கும் ஜோதிகாவுக்கும் இடையில் பிரச்னை. அதனால்தான் இருவரும் தங்களது இன்ஸ்டாகிராம் பதிவில் ஒருவரை ஒருவர் மென்சன் செய்யவில்லை. மேலும் சூர்யா தனது மகள் பதக்கத்துடன் இருக்கும் புகைப்படத்தை பகிராததற்கு காரணமே அது ஜோதிகா எடுத்த புகைப்படம் என்பதால்தான் எனவும் கூறப்படுகின்றது. இதன் மூலம் இருவருக்கும் இடையில் பிரச்னை இருப்பதுபோல் தெரிகின்றது என ரசிகர்கள் பேசிக்கொள்கின்றார்கள்.

suriya jyotika jyotika suriya

ரசிகர்கள் எதிர்பார்ப்பு: இவர்கள் இருவருக்கும் இடையில் ஏற்கனவே இடைவெளி ஏற்பட்டதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில் இவர்கள் இருவரின் நடவடிக்கையும் இவ்வாறு இருப்பது ரசிகர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் நகமும் சதையுமாக இருந்த சூர்யா ஜோதிகாவுக்கும் யாரு கண்ணு பட்டுச்சோ என புலம்பியும் வருகின்றார்கள். மேலும் அவர்கள் இருவருக்கும் இடையில் இருக்கும் பிரச்னை சீக்கிரம் சரியாகி அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என ரசிகர்கள் கடவுளை வேண்டாத குறையாக தங்களது வேதனையைத் தெரிவித்து வருகின்றனர்.

suriya jyotika jyotika suriya

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X