ஜெய்பீம் இயக்குநர் இயக்கத்தில் மீண்டும் சூர்யா.. பரபரக்கும் தகவல்கள்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

சென்னை: இயக்குநர் பாலா இயக்கத்தில் சூர்யா 41வது படத்தில் நடித்து வரும் நடிகர் சூர்யா, அடுத்ததாக வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிக்க உள்ளார்.

மேலும், சுதா கொங்கரா இயக்கத்தில் ஒரு படம் மற்றும் சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு படம் என இரு படங்களில் சூர்யா நடிக்கப் போவதாக பேச்சுவார்த்தைகள் அடிபட்டு வருகின்றன.

இந்நிலையில், ஜெய்பீம் படத்தை இயக்கிய இயக்குநர் டி.ஜே. ஞானவேல் இயக்கத்தில் மீண்டும் சூர்யா நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆஸ்கர் வரை சென்ற ஜெய்பீம்

ஆஸ்கர் வரை சென்ற ஜெய்பீம்

நீதியரசர் சந்துரு வாதாடிய லாக்கப் டெத் வழக்கை திரைக்கதையாக படமாக்கி ஜெய்பீம் என தமிழ் சினிமாவே பெருமைப்படும் படமாக இயக்குநர் டிஜே ஞானவேல் உருவாக்கி இருந்தார். சூர்யா வழக்கறிஞர் சந்துரு கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து அசத்த அந்த படம் ஆஸ்கர் போட்டியில் கலந்து கொண்டது. நாமினேஷனில் இடம்பெறும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஜெய்பீம் இடம்பெறவில்லை.

பாராட்டும் பிரச்சனையும்

பாராட்டும் பிரச்சனையும்

இருளர்களின் வாழ்க்கையையும் அவர்களை கைதிகளாக சித்தரித்து கொடுமைப்படுத்தியதையும் துணிச்சலோடு எடுத்து சொன்ன இயக்குநர் டிஜே ஞானவேலுவுக்கு சர்வதேச அளவில் பாராட்டுக்கள் குவிந்தன. அதே நேரத்தில் வன்னியர்களை தவறாக சித்தரித்து சில குறீயிடுகளை இயக்குநர் வைத்துள்ளார் என பாமகவினர் ஜெய்பீம் படத்துக்கு எதிராக பெரிய போராட்டத்தையே நடத்தினர்.

மீண்டும் இணையும் கூட்டணி

மீண்டும் இணையும் கூட்டணி

ஜெய்பீம் திரைப்படம் சூர்யாவுக்கு சர்வதேச அளவில் அங்கீகாரத்தை பெற்றுத் தந்தது. உலகளவில் IMDB ரேட்டிங்கில் முதலிடத்தை பிடித்தது. ஆஸ்கர் குழுவே அந்த படத்தை பாராட்டி முதன் முறையாக தங்களின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் ஜெய்பீம் படக் காட்சிகளை இயக்குநரின் பேட்டியுடன் வெளியிட்டனர். இந்நிலையில், மீண்டும் ஜெய்பீம் இயக்குநருடன் சூர்யா இணைய உள்ளதாக பரபரப்பு தகவல்கள் கசிந்துள்ளன.

கையில் பல பெரிய படங்கள்

கையில் பல பெரிய படங்கள்

தமிழ் சினிமாவிலேயே எந்தவொரு முன்னணி நடிகரும் கையில் இத்தனை பெரிய படங்களை வைத்திருப்பார்களா என்றால் அது சந்தேகம் தான். அந்த அளவுக்கு நடிகர் சூர்யா இயக்குநர் பாலாவுடன் சூர்யா 41வது படத்தை நிறைவு செய்ய உள்ளார். அடுத்ததாக இயக்குநர் வெற்றிமாறன் உடன் இணைந்து வாடிவாசல் படத்தில் நடிக்க உள்ளார். சிறுத்தை சிவா, சுதா கொங்கரா இயக்கத்திலும் நடிக்கப் போவதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. இந்நிலையில், மீண்டும் டிஜே ஞானவேல் உடன் ஒரு படத்தில் சூர்யா எப்படி நடிப்பார் என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

Recommended Video

சூர்யாவை பற்றிய ரகசியத்தை சொன்ன சிவகுமார் | Oh My Dog | Arun Vijay
குயிக்கி

குயிக்கி

குறைந்த நாட்களில் உருவாக்கப்பட்ட படம் தான் ஜெய்பீம். மொத்தமே சூர்யா ஒரு மாத கால்ஷீட்டுக்குள் அந்த படத்தில் நடித்து முடித்திருந்தார். இந்நிலையில், அதே போல ஒரு மாத காலக்கட்டத்திற்குள் இன்னொரு படத்தை சூர்யாவுடன் இணைந்து உருவாக்க முடிவு செய்துள்ள ஞானவேல் வலுவான திரைக்கதை ஒன்றை கூற சூர்யாவும் ஓகே சொல்லி உள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. விரைவில் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X