அண்ணணா பொறந்துட்டு பட்ற பாடு இருக்கே..வாழ்த்து சொன்ன தம்பியை கிண்டலடித்த சூர்யா!
சென்னை : சினிமாவுக்கு வந்து 25 ஆண்டுகள் ஆனதையொட்டி தன்னை வாழ்த்திய தனது தம்பி கார்த்தியை கிண்டலடித்திருக்கிறார் நடிகர் சூர்யா.
சினிமாவில் நுழைந்து 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள சூர்யாவிற்கு நடிகர், நடிகைகள், நண்பர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும், சூர்யாவின் தீவிர ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் #25yearsofsuryaism என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

நடிகர் சூர்யா
தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக பல படங்களில் நடித்து வருகின்றார் சூர்யா. இவர் பல வெற்றி திரைப்படங்களை தந்தாலும் இடையில் சில சறுக்கல்களை சந்தித்தார். பின் சூரரைப்போற்று திரைப்படம் அவரை வெற்றிப் பாதைக்கு திருப்பியது. தற்பொழுது சூர்யா பாலா இயக்கத்தில் வணங்கான் திரைப்படத்திலும் சிவா இயக்கத்தில் ஒரு திரைப்படத்திலும் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

25 ஆண்டுகள்
நடிகர் சூர்யா மற்றும் விஜய் இணைந்து நேருக்கு நேர் திரைப்படத்தில் நடித்திருந்தனர். இப்படம் 1997ம் ஆண்டு செப்டம்பர் 6ந் தேதி வெளியானது. இப்படம் வெளியாகி இன்றோடு 25 ஆண்டுகள் ஆகிறது. சூர்யா சினிமாவில் நுழைந்து 25 ஆண்டுகள் ஆவதை முன்னிட்டு, திரைப்பிரபலங்கள் பலர் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

நம்புங்கள்
முன்னதாக நடிகர் சூர்யா, தனது ட்விட்டர் பக்கத்தில், உண்மையிலேயே அழகான மற்றும் ஆசீர்வதிக்கப்பட்ட 25 ஆண்டுகள்.. கனவு காணுங்கள், நம்புங்கள்.. உங்கள் சூர்யா என்று தெரிவித்து இருந்தார்.இதையடுத்து சோஷியல் #25yearsofsuryaism என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.

அண்ணனை வாழ்த்திய தம்பி
இதையடுத்து, நடிகர் கார்த்தி,தனது வாழ்த்து தெரிவிக்கும் வகையில்,சூர்யா, கார்த்தி இருவரின் இதுவரை யாரும் பார்க்காத குழந்தை பருவ போட்டோவை பகிர்ந்து, இரவும் பகலும் உழைத்து, தனது ஒவ்வொரு மைனஸையும் மிகப் பெரிய பிளஸ் ஆக்கினார். அவர் தனது சொந்த சாதனைகளை மிஞ்சுவதிலேயே குறிக்கோளாக இருந்தார். அவர் தனி மனிதராக இருந்து தனது தாராள மனதை பெரிதாக்கினார். ஆயிரக்கணக்கான குழந்தைகளின் வாழ்க்கையை வடிவமைத்துள்ளார் என் சகோதரர் சூர்யா என நெகிழ்ச்சியுடன் கூறியிருந்தார்.

வந்தியத்தேவா
தம்பி கார்த்தியின் இந்த பதிவுக்கு பதிலளிக்கும் வகையில் நடிகர் சூர்யா, தனது ட்விட்டரில், "வந்தியத்தேவா அண்ணணா பொறந்துட்டு பட்ற பாடு இருக்கே" என கிண்டலாக பதிவிட்டுள்ளார். அண்ணன், தம்பி இருவரும் ஒருவர் மேல் ஒருவர் வைத்து இருக்கும் அன்பை பார்த்து ரசிகர்கள் வியந்துபோனார்கள்.


Click it and Unblock the Notifications











