கங்குவா கதை இதுதான்.. சூர்யாவே இப்படி புட்டு புட்டு வச்சிட்டாரே.. அந்த 3 கடவுள் தான் காப்பாத்தணும்!
சென்னை: சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா, திஷா பதானி, பாபி தியோல், நட்டி நட்ராஜ், கருணாஸ், வெங்கட் போஸ், பிரேம்குமார், யோகி பாபு, ரெட்டின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ள கங்குவா திரைப்படம் வரும் நவம்பர் 14ம் தேதி வெளியாகிறது. இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
ஆதி நெருப்பே, கங்குவா, யோலோ, மன்னிப்பு உள்ளிட்ட ஏகப்பட்ட பாடல்கள் இந்த படத்தில் இடம்பெற்றுள்ளன. சமீபத்தில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. சூர்யா, கார்த்தி, திஷா பதானி, பாபி தியோல் உள்ளிட்ட பலர் அந்த ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்துக் கொண்டனர்.

விஜய் மற்றும் உதயநிதி ஸ்டாலினுக்கு சூர்யா வாழ்த்து தெரிவித்து இருந்தார். சூர்யாவை அரசியலுக்கு வரவேண்டும் என போஸ் வெங்கட் சொல்ல, சூர்யா அரசியலுக்கு வரவேண்டாம் என ஆர்ஜே பாலாஜி கூறியிருந்தார்.
கங்குவா ப்ரோமோஷன்: நடிகர் சூர்யா தொடர்ந்து பாலய்யாவின் நிகழ்ச்சிக்கும், நாகார்ஜுனா தொகுத்து வழங்கி வரும் தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சிக்கும் கேரளா மற்றும் கர்நாடகாவிற்கும் சென்று அங்கேயும் கங்குவா படத்தை பெரிதளவில் ப்ரோமோட் செய்து வருகிறார். சமீபத்தில், ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் கங்குவா படத்தின் கதையையே சூர்யா வெளிப்படையாக கூறியுள்ளார்.
கங்குவா கதை: சிறுத்தை சிவா 700 ஆண்டுகளுக்கு முந்தைய உலகத்தை உருவாக்கி உள்ளார் என்றும் அங்கே 3 தெய்வங்களை வழிபட்டு வந்த மக்களுக்குக்கிடையே ஏற்பட்ட கருத்து மோதல்கள் யுத்தமாக மாறிய கதைதான் கங்குவா எனக் கூறியுள்ளார். நெருப்பை கடவுளாக கும்பிடும் கங்குவாவின் உலகம், நீரை கடவுளாக வழிபடும் மக்களின் உலகம் மற்றும் ரத்தத்தை கடவுளாக வணங்கும் உதிரனின் உலகம் என இந்த 3 உலகங்களுக்கு இடையே நடைபெறும் போட்டி தான் கங்குவா படத்தின் கதையாம்.

மீண்டும் மழை: கங்குவா திரைப்படம் இந்த வாரம் வெளியாக இருந்தாலும் மீண்டும் கனமழை ஆரம்பித்துள்ள நிலையில், வசூலில் மிகப்பெரிய அடியை வாங்கியிருக்கும் என்கின்றனர். அடுத்த வாரமும் இதே போல கனமழை நீடித்தால் கங்குவா நிலைமை ரொம்ப மோசமாகிவிடும் என்கின்றனர். ரஜினிகாந்தின் வேட்டையன் படத்தின் வசூல் வேட்டைக்கும் வேட்டு வைத்தது மழை தான் என்கின்றனர்.

பான் இந்தியா ஹிட் அடிக்குமா?: கங்குவா திரைப்படத்தை சூர்யா ரொம்பவே நம்பி காத்துக் கொண்டிருக்கிறார். சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான அண்ணாத்த படம் சொதப்பிய நிலையில், இந்தமுறை கங்குவா படத்தின் மூலம் அவரும் கம்பேக் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு பான் இந்தியா வெற்றியை கோட் மற்றும் வேட்டையன் பெறாத நிலையில், கங்குவா பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. டிசம்பர் 6ம் தேதி புஷ்பா 2 வெளியாகும் வரை கங்குவா ஓடும் என்கின்றனர். 1000 கோடிக்கும் அதிகமாக கங்குவா வசூல் செய்யுமா? என்கிற எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளன. எந்தளவுக்கு இந்தியா முழுவதும் உள்ள ரசிகர்களுக்கு படத்தைக் கொண்டு செல்ல வேண்டுமோ அந்தளவுக்கு படத்தை பெரிதளவில் சூர்யா புரமோட் செய்து வருகிறார். டோலிவுட்டுக்கு ஒரு பாகுபலி போல கோலிவுட்டுக்கு கங்குவா இருக்கும் என்கின்றனர்.


Click it and Unblock the Notifications











