Retro: கனிமா பாடல் ரிலீஸ்! சூர்யாவுக்காக இறங்கி குத்திய சந்தோஷ் நாராயணன்.. பொளந்து கட்டிய பூஜா ஹெக்டே

சென்னை: இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள படம் ரெட்ரோ. இந்த படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். படத்தை வரும் மே மாதம் முதல் தேதியில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டு அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இப்படி இருக்கும்போது படத்தின் இரண்டாவது பாடலான, கனிமா பாடல் இன்று அதாவது மார்ச் 21ஆம் தேதி ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே படக்குழு தரப்பில் இருந்து, டீசர், முதல் பாடலான கண்ணாடி பூவே பாடல் ரிலீஸ் செய்யப்பட்டிருந்தது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதேபோல் இன்று கனிமா பாடல் வெளியிடப்படும் என ஏற்கனவே படக்குழு அறிவித்திருந்தது. இப்படியான நிலையில் கனிமா பாடல் வெளியிடப்பட்டுள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது. கனிமா பாடலை சந்தோஷ் நாராயணன் பாடியும் உள்ளார். பாடல் வரிகள் மிகவும் சிறப்பாக இருப்பதால், பலரும் பாடல் வரிகளைப் பாராட்டி வருகிறார்கள். இந்த பாடலை பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளார்.

Suriya pooja Hegde Santhosh Narayanan Retro Kanima SONG Lyrics Video Release

ஏற்கனவே கண்ணாடி பூவே பாடல் எப்படி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதோ, அதேபோல் இந்த பாடலும் நல்ல வரவேற்பைப் பெறும் என்பதில் சந்தேகம் வேண்டாம். இந்த பாடலின் ப்ரோமோவுக்கு சந்தோஷ் நாராயணன் தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், இந்த பாடலுக்கு சந்தோஷ் நாராயணன் நடனமாடி வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவுக்கு லைக்குகளும் கமெண்ட்களும் குவிந்து வருகிறது. இந்த வீடியோவுக்கு கமெண்ட் போட்டுள்ள இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ், யோவ் இத்தனை நாளா எங்கயா இருந்த? அசத்தீட்டிங்க போங்க. சந்தோஷ் நாராயணன் ஜி, யூ ஆர் அப்பாய்ண்டேட்” என பதிவிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் கார்த்திக் சுப்பராஜை டேக் செய்துள்ள, சந்தோஷ் நாராயணன் அதற்கு, " கார்த்திக் சுப்புராஜ் சார் உங்களுக்கு இந்த நடனம் பிடிக்கும் என நினைக்கிறேன் சார். இந்த நடன வீடியோவை பாதுகாப்பு காரணங்களுக்காக யாரிடமும் பகிர வேண்டாம். எனது நடனம் எப்படி உள்ளது என கூறுங்கள் சார்" எனத் தெரிவித்துள்ளார். இவரது இந்த வீடியோவைப் பார்த்த சூர்யா, கனிமா பாடல் முழுவதும் நான் உங்களை மட்டும்தான் ஜூம் செய்து ஃபாலோ செய்தேன் என கமெண்ட் போட்டுள்ளார்.

Read more about: suriya santhosh narayanan retro
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X